இடதுகை

ரொம்ப நாளா எழுதணும்னு நினைக்கிறது ஆனா ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது.இன்று கையெழுத்து போடும் போது தான் இடதுகையை எதேச்சையா கவனிச்சேன்.ரெண்டு வருஷத்துக்கு முன்ன எத்தனை எத்தனை ஊசிகள் அத்தனையும் இடதுகை தாங்கிச்சே அதுவரைக்கும் இந்த கைக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுத்தது இல்லை.அப்போ அப்போ வாட்ச் கட்டியிருந்ததால மணி பார்ப்பேன்.ஆனா இப்போ விரல் நரம்புகளக்கூட விடாம குத்தி குத்தி .நிறமெல்லாம் மாறி வாட்ச் காட்டுனா கைல பலமில்லாம தூக்கக்கூட முடியாது.புற்று நோய விட அதற்குண்டான treatment ஆள் நிலைகுலைய செஞ்சுடுது.ஆனா நீயா நானா னு ஒரு கை பாத்துட்டதால இன்னைக்கு மறுபடியும் கம்பீரமாக வாட்சோட வலம் வரலாம்.