Posts

Showing posts from February, 2022

காசி விஸ்வநாதர்

        இன்னைக்கு காலைல பெருந்துறை லேருந்து கார்ல நானும் அவரும் வந்தோம்.காலை நேரம் ங்கறதால நான் casual dress ல இருந்தேன்.செங்கம்பள்ளி toll gate ல ஒரு traffic constable bus க்காக எட்டி பாத்துட்டு இருந்தார். வீட்டில எங்க சார் போணும்னு கேட்க கோவை ல duty னு அவர் சொல்ல வாங்க போலாம்னு ஏறச் சொன்னார்.அவருக்கு அவ்வளவு சந்தோஷம் சார் நான் உக்கடம் போகணும் driving inspector first day late ஆயிடுச்சு னு நின்னுட்டு இருந்தேன்.ஏதோ போன ஜென்மத்தில் உங்க கூட இருந்திருப்பேன் போலன்னு பேசிட்டு வரும் போது காசி விஸ்வநாதர் கதை சொன்னார்.இந்த சூழல் ல அது அவ்வளவு அர்த்தமுள்ள சம்பவமாக தோணுது.       காசி விஸ்வநாதர் கோயில் ல பூஜைகள் மிக பலமா நடக்கறத பாத்த சாமிக்கு சந்தோஷம் பொங்க இன்னைக்கு நேரா ஊருக்குள் போயிட வேண்டியதுதான் னு பிச்சை எடுக்கற மாதிரி போக எல்லா இடங்களிலும் துரத்தப்படறார்.கடைசில ஒரு இடத்தில தொழுநோயாளி ஒருத்தர் நாலு நாய்ங்களுக்கு தான் பிச்சை எடுத்த சாப்பாட்டு வெச்சிட்டு தானும் சாப்பிடப் போகையில் நம்ம கடவுள் கைய நீட்டுறார்.அவரும் சிரிச்சிட்டே தன் சாப்பாட்டை அப்படியே அவருக்கு குடுத்து சாப்பிடச் சொல்றார்.கடவுள