Posts

Showing posts from June, 2020

தந்தையர் தினம்

இன்றுதந்தையர் தினத்தில் என் தந்தைக்கு சமர்ப்பணம்   எத்தனை வருடங்கள் போயினும்    அப்பா என்ற வார்த்தை கேட்டு கண்ணீர் வந்தால் அது அப்பா செய்த தவம் ஆறடி உயரம் இருந்தாலும் இரண்டடிக்கு இறங்கி யானை அம்பாரி செய்யும் அப்பாக்கள் வரம். வேலை சோர்வு இருந்தாலும் அப்பா உப்பு மூட்டை என்றவுடன் தூக்கும் அப்பாக்கள் வரம். தன் தோழியிடம் அப்பா பெண் நான் சொல்லும் அளவிற்கு அப்பா இருந்தால் அது பெண் குழந்தைகளுக்கு வரம். பதின் வயதில் தெருவில் நடக்க பயப்படும் பெண்ணிடம் நீ சூரியன் மா தெருவில் நாய்கள் குறைக்கத் தான் செய்யும் என்று தன் கை விடுத்து தனித்து செல்ல வைக்கும்  அப்பாக்கள் வரம். தன் மேல் நம்பிக்கை வைத்து தனியே அனுப்பினாலும் அப்பாவின் மகளாய் தலை நிமிர்ந்து நடக்கும் பெண்குழந்தை  அப்பா செய்த தவம். வாழ்க்கையில் தோல்விகளுக்கும் ஏளனத்திற்கும் போராட்ட குணம் வளர்க்க உதவும் தந்தை வரம். எதற்கும் அஞ்சா நெஞ்சம் நேர்மையான வாழ்க்கை வாழும் மகள்கள் அப்பாக்கள் செய்த தவம் என் மகள் எது செய்தாலும் தவறாது என நம்பும் அப்பா வரம். அப்பா எது செய்தாலும் தனது  நன்மைக்கே என நம்பிக்கை கொண்ட பெண் குழந்தைகள் தவம்.              அப்படியே வ

புரிதல்கள்

       உறவுகள் தொடரவும் வாழ்க்கை சிறக்கவும் ஒவ்வொருவருக்கும் புரிதல் இருந்தா நல்லா அமையும்.கணவன் மனைவி ஆசிரியர் மாணவர் முக்கியமா பக்கத்து வீட்டுக்காரர் இப்படி நிறைய combo இருக்கு.இதுல மாமியார் மருமகள் நான் தொடலை.அப்பா பையன் அம்மா பொண்ணு புரிதல் இருந்தா நல்லா இருக்கும்.      அன்பும் புரிதலும் இருந்தா புளிய இலையில் கூட சாப்பிடலாம்.இது கணவன் மனைவிக்கு.ஆனா நாம் வாழையிலைல கூட ஒண்ணா சாப்பிடறதில்ல.வாசுகிய போல் மனைவி வேணும்னு நினைக்கறவன் தான் வள்ளுவனா இருக்கணும்னு ஏன் நினைக்கறதில்ல.எங்கம்மா சொல்லுவாங்க probationary period னு ரெண்டு வருஷம் சமாளிச்சுட்டா அப்புறம் வாழ்க்கை ஓட்டிடலாம்னு.ஆனா எங்க முடியுது இன்னும் சண்டை ஓஞ்ச பாடில்லை.ஆனா ஒண்ணு என்னதான் சண்டை போட்டாலும் சாப்பிட லேட்டா வந்தா நாமளும் wait பண்றோம் தானே.கோபம் இருந்தாலும் நல்லாத்தானே சமைக்கிறோம்.ஏன் இது ஒரு வித புரிதல்.புரிஞ்சிட்டா சரி.அது என்னமோ தெரியவில்லை நிறைய பேசற பையனுக்கு பேசாத பொண்ணு பேசாதவனுக்கு நிறைய பேசற பொண்ணு இப்படிதான் அமையுது.இத மாத்தறதுக்கு முயற்சி பண்ணுவாங்க அங்கே ஆரம்பிக்கும் போர்.நீ நீயா இருனு எப்போ நாம் நினைக்கிறோமோ அங

அப்பா பொண்ணு

         எல்லா பொண்ணுங்களுக்கும் அம்மாவவிட அப்பா ரொம்ப பிடிக்கும் நான் என்ன புதுசா சொல்லப் போறேன்னு பாக்கறீங்களா இன்னையோட அம்பத்தி ரெண்டு வயசு முடியுது.இன்னைக்கு அப்பா ஞாபகம் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு நிறைய பாசமான உறவுகளும் உண்மையான நண்பர்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொன்னாலும் அம்மாவின் சிரித்த முகத்தோடு Happy Bday wish ரொம்ப miss பண்றேன்.           என்னுடைய flash back  அம்மாவிற்கு symptoms பாத்துட்டு நான் பையன்னே முடிவு பண்ணிட்டாங்க.அப்பா ஆலிம் படிக்க வெக்கலாம்னு ரொம்ப ஆசை பட்டிருக்கார் . ஆனால் மேட்டூரில் ஜுன் 5ஆம்தேதி இரவு படுக்கறதுக்கு முன்னாடி புழக்கடை போயிட்டு திரும்பி வரும்போ அம்மானால வாசல் படி தாண்ட முடியாம அங்கேயே வந்தாச்சு அவ்ளோ அவசரம் உலகத்தப் பாக்க . கொஞ்சம் முந்திரி கொட்டை தான் நான்.பையன்னு நினைச்சிட்டு பார்த்தா பொண்ணு ஆனா அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டாராம் அடுத்த நாள் office ல எல்லோருக்கும் லட்டு குடுத்திருக்கார்.       சின்ன வயசுலேயே school க்கு ஆயாம்மா பின்னாடியே போயிருக்கேன்.angloIndian Brown miss அவங்க கிட்ட third standard வரைக்கும் படிச்சேன்.ஒவ்வொரு B'day க்கும

எதிர்பார்ப்புகள்

      ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு    எதிர்பார்ப்பு இருந்துட்டே இருக்கு வாழற வரைக்கும்.நம்மளோடத சொன்னோம்னா இதையெல்லாமா எதிர்பார்ப்பேன்னு மத்தவங்க சொல்லுவாங்க நமக்கு அது பெருசா தெரியும்.       அது ஆணுக்கும் பொண்ணுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு என்னதான் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைனு கும்மியடிச்சாலும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நம்ம எதிர்பார்ப்பு இருக்கும்.காலைல டீ போட்டு குடுப்போம் நம்மாளு பேப்பர் படிச்சிட்டே டீ குடிப்பாரு ஒரு தடவை டீ சுமாரா இருக்கு இல்லை சூப்பர் னு சொன்னாதான் என்னவாம்.அங்கயே கொஞ்சம் எரிச்சல் ஆரம்பிக்கும்.சின்னதா ஒரு பாராட்டு கிடைச்சிருந்தா அடுத்து டிபன் நல்லா செய்ய தோணும்.           அடுத்து வேலைக்கு போற பொண்ணா இருந்தா சிரமப்பட்டு ட்ரஸ் பண்ணிட்டு வந்து நிக்கும் அதுவும் கண்ணுக்கு தெரியாது.வேலை செய்யற இடத்தில் பாராட்டு கிடைக்கும் ஆனா நம்ம எதிர்பார்க்கும் நபர் அதாங்க  நம்ம ஊட்டுக்காரர் சொல்லலேன்னா அது ஏதோவொரு வகையில அங்க காண்பிக்கும்.            ஆம்பளைங்க எவ்ளோ தான் படிச்சு இருந்தாலும் தன்னோட பொண்டாட்டி நாணி கோணி பூவைச்சு பொட்டு வெச்சு பழைய கால சாவித்திரி மாதிரி பத்மி