Posts

Showing posts from May, 2020

போராளி

   நம்ம நாட்டு எல்லைல போராடற வீரனப்பத்தி சொல்லப்போறேன்னு பாக்கறீங்களா இல்லீங்க தன்னை நிரூபிக்கப்போராடும் பெண்களப்பத்திதாங்க சொல்லப் போறேன் ‌.     என்னதான் பெண்ணீயம் பேசினாலும்  இந்த உலகம் கண்டிப்பா ஆண்சார்புநிலை உலகமாகத்தான் இருக்கு.நாம சாதிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கு.நானும் போராட்டக்குணம் கொண்டவதான். படிக்கறதிலயும் வேலையிலயும் புகுந்த வீட்டிலயும்  போராடித்தான் ஜெயிச்சிருக்கேன்.இதவிட காலம் தர்ற வேதனையை சாதனையா மாத்தறதுக்கு பாடுபடற ஒரு பொண்ணை சந்திச்சேன்.   என் தோழியோட தோழி அவர்.அவரப்பத்திதான் இங்கே சொல்லப்போறேன். விவசாயக்குடும்பம் தான்.  ஆனால் விவசாயம் செய்யறதில்ல ரெண்டு குழந்தைகள் மாமனார் மாமியார் ம் ஆமாம் கணவர் இல்ல விபத்துல இறந்துவிட்டார்.நாங்க அவங்க  வீட்டுக்கு போனப்போ அவங்க வீட்டில் இல்லை.தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் இருந்து வேர்க்க விறுவிறுக்க வந்தாங்க.அவரைப்பார்த்ததும் தெரிஞ்சது நல்ல தைரியமான பொண்ணு னு.இல்லனா வேல வாங்க முடியாது எட்டு மணிக்கு போனா நைட்டு எட்டு மணிக்கு தான் வருவேங்க எல்லாம் automatic தான் ஆனால் நாம் நிக்கலேன்னா வேலை நடக்காது என்று சொல்லிட்டே கேரட் ஜு

ஈகைத் திருநாள்

ரம்ஜான்  நோன்பு வைப்பதற்கும் பிறருக்கு ஈந்துவுப்பதிலும் சந்தோஷம் தரும் மாதம்.யாருக்கெல்லாம் ஸகாத் குடுக்கலாம் பா அப்பாவிடம் நான் சிறுவயதில் கேட்ட கேள்வி.those who are poor and needy அப்பாவின் பதில். சின்ன வயசுல பதிஞ்சது.கையில் இருக்கும் பத்து பைசாவையும் குடுக்க மனம் மாறியதும் பிறர் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க வைத்ததும் அந்த வயதில் தான்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் சந்தோஷம் தரும் எனக்கு ஈகையை விட வேறு இல்லை என்றே சொல்லலாம். எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் குடுப்பதில் என் கணவருக்கும் எனக்கும் ஒற்றுமை அதிகம்.இந்த வருடம் ரம்ஜான் கு முன்னரே கொரோனாக்காக குடுக்க ஆரம்பித்து விட்டோம்.என் வாழ்வை நீட்டித்ததன் அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது.எந்த வருடமும் இல்லாத அளவிற்கு பிறருக்கு குடுக்க உதவிய ஆண்டவனுக்கு நன்றி . இந்த உலகத்தில் நம்மை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று அவருக்கு தெரியாமலா இருக்கும் .

அவமானங்கள் வரம்

ஒவ்வொரு மனுஷனும் வாழ்க்கை ல அவமானம் ங்கறஅரிவாள் வெட்டு வாங்காம இருக்க மாட்டார்கள்.பின்னால யோசிச்சு பார்த்தா நம்மையறியாமல் நம்ம கிட்ட மாற்றம் ஏற்பட்டிருக்கும் அது அந்த அவமானத்தினால் வந்த நல்வினை.எட்டாவது  படிக்கும் போது நடந்த நிகழ்வு கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு இன்னும் கண்ணை மூடினால் அப்படியே படம் ஓடும்.நான் நல்லா படிப்பேன்.ஆனா கையெழுத்து பார்க்க சகிக்காது.அப்பல்லாம் கையெழுத்து திருத்தறதுக்கு class  எல்லாம் கிடையாது.அதனால கையெழுத்து பத்தி எண்றத விட்டுட்டேன்.விஜயா மிஸ் கணக்கு டீச்சர் நான் என்ன நல்லா கணக்கு போட்டாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்காது.நானும் என்ன செஞ்சாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் னு என்ன இருக்கு.சரி விஷயத்துக்கு வருவோம்.ஒரு நாள் முதல் நாலு ரேங்க் எடுக்கற நாலு பொண்ணுங்க ள கூப்பிட்டு கணக்கு நோட்டு ஒரு மாசத்துக்கு யாரு அழகா வெச்சிருக்கீங்களோ அவங்களுக்கு பரிசு குடுப்பேன்னு சொன்னாங்க.நானும் முடிஞ்ச அளவுக்கு கையெழுத்து திருத்தி சுத்தமா வெச்சிருந்தேன்.ஒரு மாசம் கழிச்சு எல்லார் நோட்டையும் வாங்குனாங்க. ரெண்டு மூணு நாள் கழ

மருத்துவ தெய்வங்கள்

Image
ஊரடங்கு அறிவிப்புக்கு அப்புறமா நேத்து தான் மருத்துவமனைக்கு review காக போனேன்.50%கூட்டம் இல்லை.கடவுளுக்கு நன்றி.fever இருக்கான்னு பாத்து sanitizer குடுத்து உள்ள அனுப்பினாங்க ஒரு சேர் விட்டு ஒரு சேர்ல உக்கார வசதி எல்லோரும் மாஸ்க் போட்டுட்டு அஞ்சு நிமிஷத்தில் வேர்வை எடுத்து விட்டு எடுத்து விட்டு துடைச்சு விட்டுட்டு இருந்தேன். சென்ற வருடம் வரை மருத்துவர்கள் பற்றி அவ்வளவாக தெரிந்து கொள்ளவில்லை.இப்போ அவர்களின் மேல் நல்ல அபிப்ராயம்.எல்லா செக்கப்பும் முடிஞ்சு என்ன தான் தைரியம் னு வெளியே கெத்து காமிச்சாலும் டாக்டர் சொல்ற வரை பக்கு பக்குதான்.டாக்டர் ரூமுக்குள்ள போனா ஏதோ astronaut மாதிரி உக்காந்து இருக்கார்.அடக்கடவுளே நமக்கு மாஸ்க் போட்டே இவ்ளோ வேர்க்குது.full covered dress gloves அப்பறம் மாஸ்க் மேல ஹெல்மெட் போல கண்ணாடி போட்டுட்டு ஆஹா என்ன கொடுமை எதற்காக இப்படி கஷ்டப்படணும் யோசிச்சுட்டு இருந்தேன்.ரிபோர்ட்ஸ் பாத்துட்டு நார்மல்னு சொல்லி விட்டு இருமறார்.நிஜம் ரொம்ப கஷ்டமாக இருந்தது.ஒவ்வொரு பேஷண்ட் செக் செஞ்சு பின் gloves மாத்தறார் கையெல்லாம் வெள்ளையா மருத்துவர்கள் உலகம் வேறு அதில் பணம் சம்பாதிப்

முடி திருத்தம்

முதல் பதிவு என்னடா எடுத்தவுடன் முடி திருத்தம் னு பாக்கறீங்களா. சென்ற ஆண்டு இதே நாளில் என் மகன் கையால் மொட்டை அடித்து கொண்டேன்.ஏன்னா ரெண்டாவது கீமோ முடிஞ்சு  ரெண்டு நாள்ல முடி கொத்து கொத்தா கைல வந்தது அம்மா மொட்டை அடிச்சுக்கோ.அடித்தபின் பார்த்தா அத்தனை அழகு.ஒரு வருடம் முடிவதற்குள் மூன்று முறை அடித்துக்கொண்டேன். இப்போ முடி வளர்ந்து விட்டது.முடி திருத்துபவர் வந்திருக்கிறார்.boycut வைக்க போறேன்.கொஞ்ச நாளைக்கு பிறகு முடி வளர்க்கலாம்னு. கொரோனா பயத்தில் அவன் அவன் இருந்தா முடிய பத்தி எழுதறேன்னு பாக்றீங்களா. இழந்தாதாங்க அருமை தெரியும்.