Posts

Showing posts from March, 2021

மகளிர் தினத்தில்

      மகளிர் தினத்தில் யாரைப் பற்றி எழுதலாம் னு யோசிச்சப்போ பாட்டியின் ஞாபகம் வந்தது . அப்பாவின் அம்மா சர்வர்பீபீ.எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே போயிட்டார்.அப்போ அவருக்கு வயசு 87. அம்மா சொல்லி கேள்வி ஞானம் தான்.மாமியார் பற்றி குறைகள் இருந்தாலும் அவர் தைரியத்தை சொல்லி எங்களை வளர்த்தார் அம்மா.ஆஜானுபாகுவான உடல் கணீரென்ற குரல் யாருக்கும் எதற்கும் பயப்படாத பெண்மணி.அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நான் வெள்ளைக்காரனையே செருப்பால் அடிச்ச ஏட்டோட பொண்ணு யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று.பழமொழிகள் ஆயிரம்.எழுதியிருந்தா புத்தகமா போட்டிருக்கலாம் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.       பாட்டியின் அண்ணன் ஏமாற்றி சொத்தெல்லாம் வாங்கி கொண்டதால் படிப்புதான் முக்கியம் என்று தன் பெண் குழந்தைகளை படிக்க வைத்தார்.அப்பா பத்தாவது குழந்தை பாட்டிக்கு.ஒரு சமயம் மனம் நொந்து தூக்கில் தொங்கப்போக மூன்று வயது என் அப்பா காலைக் கட்டிக் கொண்டு அண்ணாங்க பலாப்பழம் குடுக்காம அடிக்கிறாங்க என்று அழ உடனே தற்கொலை முயற்சியை கை விட்டு அப்பாவுக்காகவே வாழ்ந்தவர்.     அப்பா காக்கிநாடா University ல் BE first year படிக்கும் போது தாத்தா இற