Posts

Showing posts from April, 2024

காக்கிநாடா பயணம்

    திடீர்னு ஒரு சந்தர்ப்பம் காக்கிநாடா போக.அது என்ன காக்கிநாடா அங்கே இருந்தவர்களும் இங்கே என்ன வேலை யா வந்தீங்க னு ஆச்சரியமா கேட்டாங்க.75 வருஷத்துக்கு முன்ன 1948ல எங்க அப்பா engineering இங்கே படிச்சாரு அந்த college பாக்க வந்தோம் னு சொன்னோம்.now it has become University நெகிழ்ச்சியான தருணங்கள்.🥰             சென்னை லேருந்து விசாகப்பட்டினம் போக train ஏற வந்தா railway station ல கிட்ட தட்ட நாலாயிரம் பேர் நிக்கறாங்க நடுங்க ஆரம்பிச்சது ஏதாவது சொன்னா திட்டு விழும் னு பேசாம ஏற நல்ல வேளை பெட்டிக்குள் யாரும் வரலை. அங்கே நிறைய கடற்கரைகள் ரெண்டு நாள்ல நாலு கடற்கரை னு யோசிச்சு முதல்ல dolphin light house போனோம் சின்ன வயதில் சென்னை light house  ஏறுனது.தம் பிடிச்சு மேலே ஏறி பார்த்தா ஆஹா கடலின் அழகு வங்காள விரிகுடா பரந்து கப்பல்களுடன்.🤩                   அங்கேருந்து அப்படியே yarada கடற்கரைக்கு போக ஒரு பக்கம் மலை மத்த பக்கம் எல்லா கடல் எங்க ஆத்துக்காரர் நடந்துட்டே என்ன போட்டோ எடுக்க ரெண்டு பசங்க பின்னாடியே வந்து நீங்க couplesஆனு கேக்க நாங்க முழிச்சோம்.உங்க ரெண்டு பேரையும் வீடியோ எடுத்து இருக்கேன் என்

மனிதம்

  • சின்ன வயசுல அப்பா கிட்ட கேட்டேன் யாருக்குப்பா குடுத்து உதவணும் முஸ்லிம் ஏழைகளுக்கா .இல்லமா those who are poor and needy .  • என் பையன் கிட்ட ஒரு நாள் ஏண்டா முஸ்லிம் மாதிரி இருக்க மாட்டேன்ற.என்னம்மா புதுசா சொல்றீங்க நீங்க நல்ல human being ஆ இருக்கணும் னு தானே எனக்கு சொல்லி வளத்தீங்க.  • நண்பர்களே எனக்கு தெரிந்து மதம் என்னும் மதம் சமீப காலமாய் தான் எல்லோரிடமும் புகுத்தப்பட்டது.  • மதமா மனிதமா  சிந்தித்து வாக்களியுங்கள் நண்பர்களே .🙏