Posts

Showing posts from July, 2020

அழுக்கு

    திரைப்படம் அவ்வளவா பார்ப்பதில்லை.review பார்த்து நாலு பேர் நல்லா இருக்கு னு சொன்ன பின்னர் போறதுக்குள்ள படத்த எடுத்துடுவாங்க கடைசியாக கஜினிகாந்த் பார்த்த ஞாபகம்.நான் பாப்கார்ன் காக போற ஆள்.இப்போ அதுவும் டேஸ்ட் இல்லை.இப்போ தியேட்டரும் திறந்து இல்லை.     அமேசான் ல பொன்மகள் வந்தாள் பார்த்தேன்.ரெண்டு நாளாக மனசு சரியில்லை. பெண்குழந்தைகள் வன்கொடுமை . என்ன சொல்ல பணக்கார பையன்கள் திமிரெடுத்து அலைவதையும் அதை அப்பாக்கள் support செய்வதையும் எடுத்திருக்கிறார்கள்.ஆனால் இதில் shoot at sight . நிஜத்தில் இப்படி நடப்பதில்லை ‌.இதைவிட மோசம் . ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நல்லபடியா வளர்க்க எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் அதையும் தாண்டி இப்படி ஆங்காங்கே நடந்து விடுகிறது.எல்லாவற்றிற்கும் போதை தான் ஆதிமூலம்.ஒரு வீடியோ பார்த்தேன்.பூனை கஞ்சா இலை சாப்பிட்டு தலைகீழாக ரெண்டு கால்ல நடந்து போகுது.       நான் சிறுவயதில் எவ்ளோ சுதந்திரமா வளர்ந்தேன்.பொற்காலம்னே சொல்லலாம்.கிருஷ்ணா திருத்தணியில் அவர்தான் எல்லாம் ஷு போட்டு விட்டு சைக்கிள் பாரில் டவல் போட்டு என்னை உட்கார வைத்து school கொண்டு விட கூட்டி வர எல்லாம்.சாயந

சமையலுக்கு ஆள்

     என் பேர் பாத்துட்டு நல்லா சமைப்பேன்னு நினைச்சா பாதி ஆமாம் பாதி இல்லை.லைட்டர்னு வந்த பின்னதான் அடுப்பு பத்த வெச்சேன்.chemistry labla bunsen burner பத்த வைக்க பக்கத்தில் கெஞ்சின ஆளு நான்.       ஏனோ சமைக்க இஷ்டப்படவே இல்லை. டீ போடக்கூட தெரியாது.கல்யாணம் நிச்சயமான பின்ன மாமியாரும் நாத்தனாரும் திடீர்னு வீட்டுக்கு வர அம்மா வெளியே போயிருந்தார்.யோசிச்சு பாத்து பால் சூடு பண்ணி horlicks போட்டுக்குடுத்தேன்.😄கூட்டுக்குடும்பம்கறதால😄 மாமியார் என்னை எடுபிடி வேலைக்குத்தான் வைத்து கொண்டார்.எனக்கும் ஜாலி.   அஞ்சு வருஷம் கழிச்சு தனிக்குடித்தனம்.அப்போல்லாம் ஃபோனும் இல்லை அம்மாகிட்டே கேட்டு சமைக்க.பையனை ஏழரை மணிக்கு அனுப்பணும் அப்புறம் நானும் அவரும் வேலைக்குப் போகணும் ‌.எப்படியோ சமையல் பழகிட்டேன்.      வீட்ல அவருக்கும் எனக்கும் சண்டை வந்து அப்புறம் agreement வெளியே கடைக்கு போற வேல அவரோடது சமையல் நான் மேல் வேலைக்கு ஆள்.முடியாத பட்சத்தில் ஹோட்டல்.அப்போ அப்போ எங்கம்மா சமைச்சா நல்லாருக்கும் னு கமெண்ட் வரும்.அது அப்படியே மருவி நம்ம வீட்டு சமையல் மாதிரி வேற எங்கேயும் இல்லை னு சொல்ற அளவுக்கு மாறிடுச்சு. போ

வலிகள்

  நான் எழுதலாம்னு முடிவு செஞ்சப்போ என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுதணும் சோகங்களையும் சிரிக்கிற மாதிரி தான் எழுதணும்னு முடிவு பண்ணேன்.      ஏனோ தெரியலை ரொம்பவே என்னை ஆட்டிப்படைக்குது.கொரோனா ஒரு பக்கம் னா சாத்தான்குளம் கொலைகள் ,தள்ளுவண்டி பெண், அல்வாக்கடை அதிபர் தற்கொலை ,நெய்வேலி விபத்து என்ன நடக்குதுன்னே தெரியல.    ஒரே நேரத்தில் எல்லாமே சரியாகக்கூடாதான்னு மனசு ஏங்குது.போன வாரம் பேரூர் குளம் பாக்கலாம் னு போனோம்.விதவிதமா பறவைங்க போர்ட்ல தான் வரைஞ்சிருக்கு ஒண்ணும் காணோம்.என்னப்பாக்கப்பிடிக்கல போல.உக்கடம் மீன் மார்க்கெட் வழியாகத்தான் போனோம்.எல்லோரும் வரிசையில் மூங்கில் கம்புகள் கட்டி நன்றாகவே இருந்தது.கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்.     பூமார்க்கெட் ரோட்டில் முழுசுமே பூக்கள் வாசனை அப்படி இழுக்கும்.இப்போ ரோட்டோரம் முழுதும் நகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதினு பார்த்தாலே மனசுல ஒரு வலி.     புது பஸ் ஸ்டாண்டில் ஒரு ஊட்டி பஸ் இல்லை. எவ்ளோ கூட்டம் நிக்கும்.மனசு சரியில்லை னு தான் வெளியே போனேன்.ஆனா இன்னும் பாரமாயிடுச்சு.ஆனா மக்கள் எல்லாத்தையும் பொறுத்துக்கறாங்கன்னு தான் தோணுது.