Posts

படம் பார்க்கலாமா

        போன ரெண்டு வாரத்துல மூணு படம் பார்த்தேன்.எனக்கு theatre போக பிடிக்கறதில்லை.வீட்டுல ஒரு படம் மூணு ஏன் நாலு நாள் கூட ஆகும் பாத்து முடிக்க.இந்த தடவை பத்து நாள்ல மூணு படம் leading role எல்லாமே பெண்கள். பாலன், சின்ன சின்ன ஆசை , ஏக் தின் ஹிந்தி. எல்லாமே .           ஏக் தின் பத்தி சொல்லணும்.சாய்பல்லவியோட முதல் ஹிந்தி படம்.நானும் இதுதான் அந்த பொண்ணோட முதல் படத்தை பாக்குறேன். பின்றாப்பா அந்த பொண்ணு அழகான ஆழ்மனச தொடற படம்.இப்படி ஒரு காதல் கதை அருமை.            பாலன் என்னமா நடிச்சு இல்லை வாழ்ந்து இருக்காங்க அம்மா பையன் ரெண்டு பேரும்.மலையாளப்படம் அந்த இயற்கையின் அழகு மனிதர்களின் இயல்பான நடிப்பு நம்மள ஒன்றிட செய்து பின் வெளியே வரும்போது மனசுல பாரம்.             சின்ன சின்ன ஆசை ல எனக்கு மதுபாலா ஏனோ ஒத்துக்கவே முடியல நிறைய தடவை நிறுத்தி நிறுத்தி பார்த்தேன்.ஆனா கடைசி நிமிடங்கள் யதார்த்தமா மனச பாதிக்கிற அளவுக்கு ரெண்டு பேரோட நடிப்பு.           மூன்று படங்கள் லயும் சின...

கோகிலா

         கோகிலா இந்த பெயரிட்டு கிட்டத்தட்ட அஞ்சு மாசமாயிடுச்சு ஆனா என்னவோ எழுதவே இல்லை.இப்போ திடீர்னு தோணுது சரி எழுதலாமா .February ல மலேஷியா போயிருந்தோம்.         எல்லோருக்கும் தெரியும் அந்த நாட்டோட சுத்தம் அப்புறமா ஒரு சாராயக் கடை இல்லை. இரவு நேரங்களில் கூட தனியா நடக்கலாம். ரோடு ரோடா நடந்தோம் நடந்து நடந்து வியந்தோம்   நான் வியந்து போனது என்னன்னா அங்கே cab ல book பண்ணி போனா ரொம்ப சௌகரியம்.நாங்க போன cab எல்லாம் 95% muslim ladies தான் ஓட்டுறாங்க.புர்கா போடறதில்லை ஆனா தளர்வான full hand shirt and pants தலையில் scarf அவ்ளோதான்.பயமே இல்லாமல் ராத்திரி பத்து மணிக்கு கூட இங்கு pickup drop வர்றாங்க.நிறைய பேருக்கு நான்கு குழந்தைகள் சாதாரணமாக.அப்புறம் வயச கேட்டா அறுபதுக்கும் மேல் பேரன் பேத்தி எடுத்தவங்களும் இருந்தாங்க.        கோகிலா யார் னு கேக்கறீங்களா அவங்களும் ஒரு cab driver தான்.காலைல லங்காவி போக ferryல போறதுக்கு ரொம்ப தூரம் போக வேண்டும் அதனால் cab book பண்ணினோம் வந்தவரிடம் எண்ற ஊட்டுக்காரர் good morning ...

அனுபவம் புதுமை

           கொஞ்ச நாளா எதிலும் நாட்டமில்லை.நாட்டின் தலைவர்கள் மக்களிடையே நிறைய பிளவுகள ஏற்படுத்தி குளிர் காயராங்கனு மனசுல அப்புறம் தமிழ்நாட்டு அரசியல் யாரும் இங்கே யோக்கியன் இல்லை ஒரு நாட்டின் தலையெழுத்து கேலிக்கூத்தாகி விட்டது.               சரி நம்ம விஷயம் என்னன்னா கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடி சில பல‌ இடங்களுக்கு போயிட்டு ரயில் விட்டு இறங்கும் போது மழையால் சகதி படில கால் வெச்சேனோ இல்லையோனு கூட தெரியல வழுக்கி வலது கால் ரயிலுக்கும் platform க்கும் நடுல போய் அல்லானு கத்திட்டு குப்புற விழுந்தேன்.            அடுத்த நொடி ரயில் ல‌ நின்னுட்டு இருந்தவங்க சட்டுனு குதிச்சு ரெண்டு பக்க தோள் புடிச்சு இழுத்து மேல் உக்கார வெச்சுட்டாங்க.           ஒரு அலறல் அது அல்லாவா முருகாவா இல்லை ஜீஸஸா எதையும் பாக்காம உதவி செஞ்சாங்க அவ்ளோதான்.எனக்கு கால் ஊன கூட முடியல கஷ்டப்பட்டு அங்கே நடந்து சேர்ல உக்கார்ந்து இருந்தேன்.            ஒரு அம்மா பையன் ரயில் ஏற வ...

கார்த்திகை தீபம்

     கார்த்திகை தீபம் னாலே அழகு.முன்னே எல்லாம் நாங்க வண்டில ஒரு ரவுண்டு போவோம் வீடுகள் ல விளக்கு எரியற அழக பாக்கவே.        Housing unit ல இருக்கும் போது என் பையன் எதுத்த வீட்டு பொண்ண அக்கா எங்க வீட்டுக்கு வாங்க னு இழுத்துட்டு வந்து பால்கனில விளக்கு வைக்க சொல்லி அவங்க வைக்கலாமா னு  கேட்டு பால்கனி முழுசும் விளக்கு எரிய விட்டது இன்னும் மறக்க முடியல.        ஒரு வருஷம் அந்த அக்கா எனக்கு phone பண்ணி நாங்க வர்றதுக்கு time ஆகும் போல வீட்டுல அவர் விளக்கு தருவாரு எண்ணெய் ஊத்தி விளக்கு பத்த வெச்சிடுறீங்களா னு கேட்டு நான் ரொம்ப ரசிச்சு அவங்க வீட்டில் விளக்கு வெச்சதும் மலரும் நினைவுகள்.      ஏனோ இப்போ ரொம்ப அந்நியப் பட்டு விட்டோமோ னு தோணுது .

ஆச்சரியம் ஆனால் உண்மை

        நேத்து சத்தியமங்கலம் பக்கத்துல அத்தாணி வரை போக வேண்டி இருந்தது.சத்தியை கடக்கும் போது கல்லறை தோட்டம் இங்கே தான அப்பாவும் அம்மாவும் னு நினைச்சு போயிட்டு இருக்கும்போது என்கூட படிச்ச பழனிச்சாமி வீடு கிரகப்பிரவேசத்துக்கு போனது.நீ வருவேன்னு நான் எதிர்பாக்கல னு சொன்னது எங்க கூடவே இருந்து சாப்பிட்டது கடைசி வரை என்ன சொல்லியும் கவர் வாங்காதது.அப்படியே பழைய ஞாபகங்கள்.          திரும்பி சத்தி வழியா வரும் போது அம்மா இருந்து இருந்தா சாப்பாடு ரெடியா வெச்சு பரிமாறி இருப்பாங்க னும் ஏதோ வெளியார் போல அந்த இடத்தை கடந்ததும் மனசுக்கு ரொம்ப பாரமா இருந்தது.அவரோட நண்பர் சத்தில வேண்டாம் சிறுமுகை ல ரமேஷ் மெஸ் நல்லா இருக்கும் னு கூட்டிட்டு போனார்.நண்பர் ரமேஷின் பிறந்த நாள் அன்னைக்கு ரமேஷ் மெஸ் ல சாப்பிடறோம்னு சிரிச்சிட்டே உள்ள போனோம்.          நல்ல பசி சாப்பாடு வெச்ச பெண் கழுத்தில் கருகமணி ஆனா சரளமா கன்னடம் பேசிட்டுஇருந்தாங்க.மறுமடியும் அம்மா ஞாபகம்.அம்மா நல்லா கன்னடம் பேசுவாங்க.எண்ற ஊட்டுக்காரர் அந்த அம்மாவப்பார்த்து நீங்க முஸ்லிமா னு க...

ஈத் முபாரக்

     ரம்ஜான் ஈத் முபாரக் . முக்கிய பண்டிகை னா ரம்ஜானும் பக்ரீத்தும்.ரம்ஜானுக்கு கண்டிப்பா புதுத்துணி உண்டு பக்ரீத் பற்றி ஞாபகம் இல்லை.       ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது பெரிய கர்வம் பள்ளிப்பருவத்தில்.நான் சரியாக சாப்பிட மாட்டேன் னு எங்க அம்மா சஹருக்கு எழுப்பாம விட்டுடு வாங்க.அழுவேன்.கொஞ்சம் பெரியவளானதும் நோன்பு வெக்கலன்னா புதுத்துணி வாங்க கூடாது னு வைராக்கியமா இருந்திருக்கிறேன்.         காலேஜ் படிக்கும் போது எனக்கு முடியாது.அப்போவே ரம்ஜான் அன்னைக்கு practical exam பண்ணியிருக்கேன்.அப்புறம் சத்தியமங்கலத்தில் மிக ஆழமான நோன்பு நாட்கள்.பக்கத்து வீடுகளில் பண்டமாற்று முறை.பாட்டி அம்மா நான் மூன்று பேரும் இருப்போம்.அப்பாவால் முடியாது ஆனால் அவரால் முடிந்த அளவுக்கு வாழைப்பழம் பேரிச்சை சாக்லேட் எல்லாம் வாங்கி பள்ளிவாசல் இஃப்தாருக்கு போய் நோன்பாளிகளுக்கு குடுத்து தானும் நோன்பு துறந்தார்.           தராவீஹ் தொழுகை அப்பா விட்டதே இல்லை.எங்கள் வீட்டில்  புதுசா fridge வாங்கி இருந்தோம்.எல்லோரும் தண்ணீர் எலுமிச்சை ஜூஸை கொண்...

அலைமகள்

Image
நில் என்றேன்  அப்படியே நின்றது ஆனால்  பாவமாக  பார்த்தது சரிசரி மெதுவா என்றேன்  மகிழ்ச்சியில்  பொங்கி தழுவியது. 🥰