அர்ச்சுனா
மகாபாரதத்தில் கர்ணன் எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு பிடிச்ச character அர்ச்சுனா.என்னோட சின்ன வயசுல இருந்து இப்பவரைக்கும் மறக்க முடியாத ஆள் பேரும் அர்ச்சுனாதான். மாட்டுப்பொங்கல் அன்னைக்கு கண்டிப்பா உன் ஞாபகம் வந்துடுது. எட்டு வயதிருக்கும் எனக்கு அர்ச்சுனா இங்க வா என்று கூப்பிட்டு தான் பழக்கம் வந்துட்டேன் சின்ன பாப்பா சொல்லிட்டே முன்னாடி நிக்க இது அர்ச்சுனா.கால் வலிக்கும் பாப்பா நான் தூக்கிக்கிறேன்னு என்னைத்தோளில் தூக்கி school கு கூட்டிப் போவார்.இப்போலாம் மூன்று வயது குழந்தை கூட ஆண்களிடம் தள்ளி இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வா பாப்பா பால் கறக்க சொல்லிக்குடுக்கறேன்னு மாடு மடியை தொட வைத்தது.நெல்லிக்காய் மரத்தில் ஏற்றிவிட்டு காய்களை உலுக்கச்செய்தது ஆளுயர மீன்களை சுத்தம் செய்யும்போது அது என்ன இது என்னனு நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது எல்லாமே அர்ச்சுனாதான்.அவருக்கு மூணு பசங்கனு ஞாபகம் என் வயசு இருக்கும் ஒரு பையனுக்கு. ...