கடற்கரை
போன வருஷம் டிசம்பர் ல பெசன்ட் நகர் பீச் க்கு ரொம்ப ஆசையா போனேன் . நுழையும் போதே நிறைய கடைகள் அப்புறம் கடற்கரை ல போய் உக்காரலாம்னா நிறைய நாய் காக்கா தலைக்கு பக்கமா பறந்து பறந்து போச்சு.கூட்டமும் ஜாஸ்தி . கொஞ்ச நேரம் தான் உக்காந்தேன் .போய் பஜ்ஜி கடைல அம்பது ரூபாய்க்கு அஞ்சு சாப்பிட்டு கிளம்பிட்டோம். இந்த வாரம் போலாம் னு வீட்டு ல சொன்னப்போ பழசு அப்படியே rewind ஆச்சு.ஆனாலும் வீட்டுக்குள்ளயே இருக்கோமே போலாம் னு கிளம்பினேன்.Beach உள்ளே நுழையும் போதே நம்மாளுக்கு டீ ஞாபகம் வர அங்கே இருந்த turkey tea shopல உக்கார்ந்து டீ சக்கரை இல்லாமனு கேக்க சார் காஃபி வேணா சக்கரை இல்லாமல் கிடைக்கும் னு அந்த கடைக்கார பொண்ணு சொல்ல சரினு wait பண்றோம் பண்றோம் பண்ணிட்டே இருந்தோம். பொறுமையிழந்து கேக்க சார் மணல்ல வெச்சு சூடு பண்ணி தருவோம் அதான் இப்போ ரெடியாயிடும்னு மறுபடியும் ரொம்ப நேரம் கழிச்சு கொண்டு வந்து குடுத்தது.அதுல சக்கரை சேர்த்து தான் இருந்தது. ஒரு வழியாக கடற்கரை நோக்கி நகர்ந்தோம்.ஆ...