கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் னாலே அழகு.முன்னே எல்லாம் நாங்க வண்டில ஒரு ரவுண்டு போவோம் வீடுகள் ல விளக்கு எரியற அழக பாக்கவே. Housing unit ல இருக்கும் போது என் பையன் எதுத்த வீட்டு பொண்ண அக்கா எங்க வீட்டுக்கு வாங்க னு இழுத்துட்டு வந்து பால்கனில விளக்கு வைக்க சொல்லி அவங்க வைக்கலாமா னு கேட்டு பால்கனி முழுசும் விளக்கு எரிய விட்டது இன்னும் மறக்க முடியல. ஒரு வருஷம் அந்த அக்கா எனக்கு phone பண்ணி நாங்க வர்றதுக்கு time ஆகும் போல வீட்டுல அவர் விளக்கு தருவாரு எண்ணெய் ஊத்தி விளக்கு பத்த வெச்சிடுறீங்களா னு கேட்டு நான் ரொம்ப ரசிச்சு அவங்க வீட்டில் விளக்கு வெச்சதும் மலரும் நினைவுகள். ஏனோ இப்போ ரொம்ப அந்நியப் பட்டு விட்டோமோ னு தோணுது .