பயணங்கள்
யாருக்கு தான் ஆசை இல்லை ஊர்சுற்ற எத்தனை வாகனங்கள் பஸ் கார் ரயில் விமானம்.இன்னும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ மாட்டுவண்டி குதிரை வண்டி. கொரோனா வந்த பின் எல்லோருக்கும் எங்காவது வெளியே போனா போதும் போல் ஆகிவிட்டது.எனக்கு ஒரே வண்டியில் போறது போர்.மாத்தி மாத்தி போக பிடிக்கும்.அதுலயும் கேரளா ஜீப்பில் போறது ரொம்ப இஷ்டம். ரொம்ப தூரமா போறதுக்கு ரயில விட எது நல்லா இருக்க முடியும். இப்போ விமானங்கள் வந்தாச்சு ஆனாலும் ஜிக்குபுக்கு ரயில் மாதிரி வருமா.நேத்துகூட என் அக்கா மகன் கிட்ட பேசும் போது சொன்னான் எனக்கு AC ல போகப்பிடிக்காது . வெளியே வேடிக்கை பாக்காம சுத்த போர்.எனக்கும் அப்படித்தான் ஆனால் இப்போ எல்லாம் ரொம்ப தொந்தரவாக இருக்கு second class ல். குதிரை வண்டிக்கு வருவோம்.பத்தாவது தருமபுரியில் படித்த போது குதிரை வண்டியில் தான் போவேன்.பின்னால் கால் தொங்கப்போட்டு பசும்புல் மேல் ஜமக்காளம் போட்டு புல் வாசனையோடு ஆஹா அந்தப் பயணம் போல் வருமா. ஒரு சொடுக்கு போட பறக்கும் வண்டி காரெல்லாம் எம்மாத்திரம்.ஹோ ஹோவெ...