பயணங்கள்

 


   யாருக்கு தான் ஆசை இல்லை ஊர்சுற்ற எத்தனை வாகனங்கள் பஸ் கார் ரயில் விமானம்.இன்னும் மோட்டார் சைக்கிள் ஆட்டோ மாட்டுவண்டி குதிரை வண்டி.  
      கொரோனா வந்த பின் எல்லோருக்கும் எங்காவது வெளியே போனா போதும் போல் ஆகிவிட்டது.எனக்கு ஒரே வண்டியில் போறது போர்.மாத்தி மாத்தி போக பிடிக்கும்.அதுலயும் கேரளா ஜீப்பில் போறது ரொம்ப இஷ்டம்.
ரொம்ப தூரமா போறதுக்கு ரயில விட எது நல்லா இருக்க முடியும்.
இப்போ விமானங்கள் வந்தாச்சு ஆனாலும் ஜிக்குபுக்கு ரயில் மாதிரி வருமா.நேத்துகூட என் அக்கா மகன் கிட்ட பேசும் போது சொன்னான் எனக்கு AC ல போகப்பிடிக்காது . வெளியே வேடிக்கை பாக்காம சுத்த போர்.எனக்கும் அப்படித்தான் ஆனால் இப்போ எல்லாம்  ரொம்ப தொந்தரவாக இருக்கு second class ல்.
       குதிரை வண்டிக்கு வருவோம்.பத்தாவது தருமபுரியில் படித்த போது குதிரை வண்டியில் தான் போவேன்.பின்னால் கால் தொங்கப்போட்டு பசும்புல் மேல் ஜமக்காளம் போட்டு புல் வாசனையோடு ஆஹா அந்தப் பயணம் போல் வருமா. ஒரு சொடுக்கு போட பறக்கும் வண்டி காரெல்லாம் எம்மாத்திரம்.ஹோ ஹோவென்று சொன்னால் அப்படியே speed குறஞ்சு  நிக்கும்.ஒருநாள் வண்டிக்காரன் மாத்தி வர பொண்ணுங்க சொல்ல சொல்ல வேகமாய் விரட்டி ஆனந்தம்.ஆனால் கடைசியாக நான் மட்டும் வண்டியில் குதிரைக்கு கோபம் வந்து கரகரவென ரவுண்ட் அடிக்க வண்டிக்காரனுக்கு என்ன செய்ய னு தெரியல.ஒரு இருபது ரவுண்ட் அடிச்ச பின்னதான் குதிரைக்கு கோபம் தணிஞ்சு நின்றது.நான் ரெண்டு பக்கமும் பிடிச்சுட்டு அப்படியே முழங்கால் ல நின்னுட்டு அப்பப்பா இப்போ நினைச்சா தலை சுத்துது.
     மயிலாடுதுறையில் சைக்கிள் ரிக்ஷாவில் போனேன்.உண்மைய சொல்லணும்னா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது இத்தனைக்கும் ான் ஒல்லியாதான் இருந்தேன்.அப்படியும் அவர் சைக்கிள் மிதிக்கும் போது எனக்கு வலிச்சது.மோசமான அனுபவம் எனக்கு கோவையில் டவுன் பஸ்ஸில் போகும் போது தான்.ஒருமுறை ரவுண்டானாவில் பஸ் திரும்பும் போது சுத்தமா படிக்கட்டு க்கு வெளிய போயிட்டேன்.விழுந்திருந்தா 84 ஆம் வருஷமே ஆள் காலி.😄
       பொள்ளாச்சியில் கல்லூரி படிப்பு அங்கே வீடு எடுத்து நான் அக்கா பாட்டி மூன்று பேரும் தங்கியிருந்தோம் வாரா வாரம் பாட்டியையும் கூட்டிக்கிட்டு பஸ்ஸில் கோவை வந்துடுவோம்.ஒரு வருடம் இப்படியே அப்புறம் அப்பா retired ஆன பின்னாடி பொள்ளாச்சியில் தங்கி விட்டோம் கடைசி வருஷம் காலேஜ் கோவைக்கு மாத்திட்டாங்க நாங்க கணபதில வீடு பாத்து போயிட்டோம்.நாள் நல்லா இல்லைன்னு ஆகஸ்ட் ல தான் சரவணம்பட்டி . அது வரை பொள்ளாச்சியில்.அப்புறம் என்காலைல டவுன் பஸ் காந்திபுரத்தில்  ஆறே முக்காலுக்கு கலைமகள் பஸ்ஸில் போனால் எட்டு மணிக்கு பொள்ளாச்சி அங்கிருந்து டவுன் பஸ் பத்து நிமிஷத்தில் காலேஜ்.ரெண்டு மாசம் இப்படியே சாயந்தரம் எப்படி ன்று நினைவில்லை.
    அப்புறம் ஒரு வழியா கோவையில்.111 பஸ் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் வரும் விட்டால் மூணு கிமீ நடந்து வரணும்.மாட்டு வண்டியில் எல்லாம் பசங்க போவாங்க.இன்னைக்கு அந்த ரோட்டில் செம traffic.இப்போ பத்து நிமிடத்திற்கு ஒரு பஸ். ஆனால் ஒண்ணு இந்த 111 பஸ் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக 2018 வரை இருந்தது.
       கார் வசதி வந்ததும் சொகுசாக நிறைய இடங்களுக்கு போனோம்.பஸ்களில் போகும் போது compact luggage இருக்கும்.காரில் அப்படியில்லை இஷ்டத்திற்கு எடுத்து போறது.என் பையன் driving ல் போவது full energetic ஆ இருக்கும்.high pitch songs உடன் .மத்த நேரத்தில் கொஞ்சம் சத்தமா பாட்டு வெச்சா கோபம் வரும்.melody songs தான் பிடிக்கும்.driving ல் மட்டும் அதுவும் பையனுடன் மட்டும் சவுண்ட் ஜாஸ்தியா.😄
     ரயில் பயணங்களில் தனியா எழுதறேன். மறுபடி பயணங்கள் எப்போனு ரொம்பவே ஆர்வமா இருக்கு.எனக்கு பெரிய பெரிய ஊர் சுத்தறது னுலாம்  இல்லை.இந்த போற வழியிருக்கே பசுமையான நடு நடுவே ஆறு மலைனு பூக்கள் னு இனிமையான பயணமா இருக்கணும்.அவ்ளோதான் me Happy. அதுக்கு கேரளாவை விட்டா வேற இடமுண்டா.😍
      

Comments

  1. சொர்க்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறீர்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி . பேசுவது போல் உணர்வு ஏற்பட்டுதுன்னா மகிழ்ச்சி 🙏

      Delete
  2. பயணம் எனக்கு மிகவும் பிடித்தது - எந்த வாகனத்தில் பயணித்தாலும் ஒரு வித சுகம் உண்டு! நானும் இப்படி சில வாகனங்களில் பயணித்திருக்கிறேன் - எருமை மாட்டு வண்டியில் கூட! வடக்கே காளைக்கு பதில் எருமைகளை தான் மாட்டு வண்டிக்குப் பயன்படுத்துவார்கள்.

    தீதுண்மி ஒழிந்து விரைவில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 7 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது பயணம் சென்று!

    ReplyDelete
  3. எருமை மாட்டு வண்டி நன்றாயிருக்கிறதே.பார்ப்போம் எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று.நன்றி வெங்கட்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை