உறவுகள்
உறவுகள் எவ்ளோ உண்மையா இருக்க முடியும். சில நேரத்தில எல்லாருமே பொய்யா தெரிவாங்க விலகியே இருப்போம்.சில நேரத்தில அவங்க தான் முக்கியமா தெரிவாங்க நாமளா தேடிப்போவோம்.மனுஷ மனசு இருக்கே நிஜம்மாவே குரங்குதாங்க.காலைலதான் நினைப்பேன் இவங்க கிட்ட இனிமே பேச்சுவார்த்தை வெச்சுக்கவே கூடாது னு ஆனா ஒரு போன் கால் போதும் அப்படியே மாறி பேச ஆரம்பிச்சுடுவேன்.யார் முதல்ல அதுலதான் இருக்கு சூட்சுமம். பணத்தில சொத்துல பாசத்துல ஏமாத்தின உறவுகள் கிட்ட மறுபடி பேச முடியுமா தெரியல ஆனா காலம் சேக்கணும்னு நினைச்சா தன்னால கொண்டு சேத்துடும்.இல்லைனா சாகுற வரை பேச்சே இல்லாமல் போகும்.உண்மையான உறவுகள்னா அம்மா அப்பா தவிர குழந்தைகள் கணவன் இல்லைனா மனைவி அப்புறமா தாத்தா பாட்டி அக்கா தம்பி அண்ணா தங்கச்சி ஆனாலும் இவை கிடைக்கவும் வரம் வேண்டும்.சகோதர உறவு சொத்து இல்லைனா அருமை சொத்து தகராறில் சாகிற வரை முகத்த திருப்பி போன உறவுகள் நிறைய. உறவுகள் ஒரு வினோதமான உறவு.நல்லா இருந்தா அவனா என்றும் ஏதாவது ஒண்ணு நடந்துடுச்சுன்னா நான் இருக்கிறேன் தைரியமா இருன்னும்.அப்பவ...