உறவுகள்
உறவுகள் எவ்ளோ உண்மையா இருக்க முடியும். சில நேரத்தில எல்லாருமே பொய்யா தெரிவாங்க விலகியே இருப்போம்.சில நேரத்தில அவங்க தான் முக்கியமா தெரிவாங்க நாமளா தேடிப்போவோம்.மனுஷ மனசு இருக்கே நிஜம்மாவே குரங்குதாங்க.காலைலதான் நினைப்பேன் இவங்க கிட்ட இனிமே பேச்சுவார்த்தை வெச்சுக்கவே கூடாது னு ஆனா ஒரு போன் கால் போதும் அப்படியே மாறி பேச ஆரம்பிச்சுடுவேன்.யார் முதல்ல அதுலதான் இருக்கு சூட்சுமம்.
பணத்தில சொத்துல பாசத்துல ஏமாத்தின உறவுகள் கிட்ட மறுபடி பேச முடியுமா தெரியல ஆனா காலம் சேக்கணும்னு நினைச்சா தன்னால கொண்டு சேத்துடும்.இல்லைனா சாகுற வரை பேச்சே இல்லாமல் போகும்.உண்மையான உறவுகள்னா அம்மா அப்பா தவிர குழந்தைகள் கணவன் இல்லைனா மனைவி அப்புறமா தாத்தா பாட்டி அக்கா தம்பி அண்ணா தங்கச்சி ஆனாலும் இவை கிடைக்கவும் வரம் வேண்டும்.சகோதர உறவு சொத்து இல்லைனா அருமை சொத்து தகராறில் சாகிற வரை முகத்த திருப்பி போன உறவுகள் நிறைய.
உறவுகள் ஒரு வினோதமான உறவு.நல்லா இருந்தா அவனா என்றும் ஏதாவது ஒண்ணு நடந்துடுச்சுன்னா நான் இருக்கிறேன் தைரியமா இருன்னும்.அப்பவும் குத்திக்காமிக்கற உறவுகள் உண்டு.எங்கப்பா இறந்தப்போ எனக்கு 22 வயது.அப்பாவோட பென்சன் மட்டுமே.திடீர்னு இழப்பு அம்மாவும் நானும் மீள முடியாமல் கஷ்டப்பட்டோம் அண்ணா இருந்தும் . சமாதானம் படுத்தறேன் பேர்வழி னு எங்கம்மாவோட சித்தி உனக்கு தான் பென்சன் இருக்கில்ல அப்புறம் என்ன னு சொல்ல இன்னைக்கு வரை என்னால் அவங்கள மன்னிக்க முடியல.சும்மாவாவது இருக்கலாம்.இப்டி பேசி உறவுகள கஷ்டப்படுத்தக்கூடாது.
நட்பு மிகச் சிறந்த உறவுனு சொன்னாலும் எத்தனை பேருக்கு உண்மையா அமையுது தெரியல. விட்டுக்கொடுக்கும் நட்பு ஒரு பக்கமா இருந்தா அது சிறந்த நட்புனு எடுத்துக்க முடியல.நண்பன் குடும்பம் னு வரும்போது குடும்பம் னு தான் போவோம்.கர்ணன் துரியோதனன் போல் நட்பு இப்போ இருக்குமான்னா கேள்விக்குறிதான்.மேலோட்டமா பார்த்தா தெரியாது.ஆழ்ந்து பார்க்கும்போது சுயநலம் நிறைய இருக்கும்.இதயெல்லாம் மீறி குற்றம் பார்த்தா சுற்றம் இல்லை னு நாம் பழகிட்டு இருக்கோம்.
சின்ன வயசுல இருந்தே நான் உண்மையான ஒரு தோழமைக்காக நிறைய தேடியிருக்கேன்.ஏதோ ஒரு கட்டத்தில் சுயநலம் வரும் போது என்னால் ஏத்துக்க முடியாம ஒதுங்கிடுவேன்.இப்போ எல்லாம் எல்லோரும் நண்பர்கள் கொஞ்சம் கூட கொஞ்சம் குறைய என்ற எண்ணம் வந்துடுச்சு உண்மையா பொய்யா னு யோசிக்கிறது இல்லை.தாமரை இலை தண்ணீர் போல் உறவுகளுடன் இருக்க பழகிக்கிட்டேன். நான் பகிரணும்னு நினைச்சா பகிர்ந்துக்கறேன் அன்பா இருந்தாலும் சரி பொருளா இருந்தாலும் சரி எதிர்பார்ப்புகள்இல்லாமல் 😊😊
எண்ணம் போல வாழ்வு...
ReplyDelete🙏😊
DeleteLife is to learn ,it continues
ReplyDeleteYes true.it also differs
Delete