மகளிர் தினத்தில்

      மகளிர் தினத்தில் யாரைப் பற்றி எழுதலாம் னு யோசிச்சப்போ பாட்டியின் ஞாபகம் வந்தது . அப்பாவின் அம்மா சர்வர்பீபீ.எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே போயிட்டார்.அப்போ அவருக்கு வயசு 87. அம்மா சொல்லி கேள்வி ஞானம் தான்.மாமியார் பற்றி குறைகள் இருந்தாலும் அவர் தைரியத்தை சொல்லி எங்களை வளர்த்தார் அம்மா.ஆஜானுபாகுவான உடல் கணீரென்ற குரல் யாருக்கும் எதற்கும் பயப்படாத பெண்மணி.அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நான் வெள்ளைக்காரனையே செருப்பால் அடிச்ச ஏட்டோட பொண்ணு யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று.பழமொழிகள் ஆயிரம்.எழுதியிருந்தா புத்தகமா போட்டிருக்கலாம் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.

      பாட்டியின் அண்ணன் ஏமாற்றி சொத்தெல்லாம் வாங்கி கொண்டதால் படிப்புதான் முக்கியம் என்று தன் பெண் குழந்தைகளை படிக்க வைத்தார்.அப்பா பத்தாவது குழந்தை பாட்டிக்கு.ஒரு சமயம் மனம் நொந்து தூக்கில் தொங்கப்போக மூன்று வயது என் அப்பா காலைக் கட்டிக் கொண்டு அண்ணாங்க பலாப்பழம் குடுக்காம அடிக்கிறாங்க என்று அழ உடனே தற்கொலை முயற்சியை கை விட்டு அப்பாவுக்காகவே வாழ்ந்தவர்.

    அப்பா காக்கிநாடா University ல் BE first year படிக்கும் போது தாத்தா இறந்து விட ஊருக்கு வந்த அப்பாவின் உடல்நிலை பார்த்து 40 நாள் முடிந்ததும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனியாளாக ரயில் ஏறி காக்கிநாடா சென்று வீடு எடுத்து தங்கி அப்பாவின் படிப்பு முடிந்ததும் தான் ராசிபுரம் வந்தார்.

      அம்மா அடிக்கடி சொல்லுவாங்க பாட்டி மட்டும் இல்லைனா நான் அப்பா கூட ஒவ்வொரு ஊரிலும் இருந்திருக்கவே முடியாது.அவங்க தைரியத்தில் தான் நான் இருந்தேன் னு. தலையணைக்கு கீழ கருவேப்பிலை கூடைல அடுப்புகிட்ட  பாம்பெல்லாம் இருக்கும் .அது என்ன பண்ணுதுனு அசால்ட்டா தூக்கி போடுவாங்க.ஊர் மாறுதல் வந்தா அவங்க மூட்டை கட்டி லாரில ஏத்தி நம்மளயும் ஏத்திக்கிட்டு போயிடுவாங்க.அவங்க குடுத்த தைரியம் தான் நான் இப்போ செய்யறது னு .

     நாங்க தைரியம் குறையறப்போ அப்பா சொல்றது சர்வர்பீபீயோட பேத்திமா நீ நேர்மையாக வாழறவங்க எப்பவுமே நிமிர்ந்து நிக்கணும் பயப்படக்கூடாது என்று. சோர்வு ஏற்படும் போது மீண்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தோன்றுவது  பாட்டியோட genes என்கிட்டயும் இருக்கறதாலதான்னு கண்டிப்பாக சொல்லமுடியும். Hats off to you my respected Dhadhima.

Comments

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை