காசி விஸ்வநாதர்

 

      இன்னைக்கு காலைல பெருந்துறை லேருந்து கார்ல நானும் அவரும் வந்தோம்.காலை நேரம் ங்கறதால நான் casual dress ல இருந்தேன்.செங்கம்பள்ளி toll gate ல ஒரு traffic constable bus க்காக எட்டி பாத்துட்டு இருந்தார். வீட்டில எங்க சார் போணும்னு கேட்க கோவை ல duty னு அவர் சொல்ல வாங்க போலாம்னு ஏறச் சொன்னார்.அவருக்கு அவ்வளவு சந்தோஷம் சார் நான் உக்கடம் போகணும் driving inspector first day late ஆயிடுச்சு னு நின்னுட்டு இருந்தேன்.ஏதோ போன ஜென்மத்தில் உங்க கூட இருந்திருப்பேன் போலன்னு பேசிட்டு வரும் போது காசி விஸ்வநாதர் கதை சொன்னார்.இந்த சூழல் ல அது அவ்வளவு அர்த்தமுள்ள சம்பவமாக தோணுது.

      காசி விஸ்வநாதர் கோயில் ல பூஜைகள் மிக பலமா நடக்கறத பாத்த சாமிக்கு சந்தோஷம் பொங்க இன்னைக்கு நேரா ஊருக்குள் போயிட வேண்டியதுதான் னு பிச்சை எடுக்கற மாதிரி போக எல்லா இடங்களிலும் துரத்தப்படறார்.கடைசில ஒரு இடத்தில தொழுநோயாளி ஒருத்தர் நாலு நாய்ங்களுக்கு தான் பிச்சை எடுத்த சாப்பாட்டு வெச்சிட்டு தானும் சாப்பிடப் போகையில் நம்ம கடவுள் கைய நீட்டுறார்.அவரும் சிரிச்சிட்டே தன் சாப்பாட்டை அப்படியே அவருக்கு குடுத்து சாப்பிடச் சொல்றார்.கடவுள் எத்தனை செல்வந்தர் இருக்கற இந்த ஊர்ல தான் பிச்சை எடுத்த சாப்பாட்ட‌ மத்தவங்களுக்கு குடுக்கறானே இவன் அல்லவா செல்வந்தன்னு மனம் மகிழ்ந்து நான் யார் னு தெரியுதா நான் தான் காசி விஸ்வநாதர் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் னு கேக்க அவர் சொன்ன பதில் எனக்கு அப்பவே தெரியுமய்யா  எல்லோரும் விலகி ஓடுற ஒருத்தன் கிட்ட சாப்பாடு கேக்கறவன் கடவுளா மட்டுமே இருக்க முடியும் னு வணங்க கடவுள் அவரை அணைத்து அவரோட தொழுநோய் போகிறது.

       இதை சொல்லி முடித்துவிட்டு என்னோட ஊரு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் மலைக்கு கீழே தான் எங்க வீடு நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும் எங்க வீட்டுல நாட்டுக் கோழி இருக்கு சார் பிரியாணி போட்டுடலாம் என்று சந்தோஷமா அழைப்பு சொல்ல நாங்க முஸ்லிம் சார் ஆனாலும் எல்லா கோயிலுக்கும் போவோம் அப்படின்னு பதில் சொன்னோம் அதுக்கு அவர் உங்கள பார்த்தா முஸ்லிம் மாதிரியே தெரியல சார் .

       நான் பதில் சொன்னேன் எங்கப்பா அப்படித்தான்  வளர்த்து இருக்காரு மதம் தேவையில்லை மனிதம்தான் முக்கியம்னு . அவரு ஒரு பத்து தடவையாவது டீ சாப்பிட  சொல்லிட்டே இருந்தார் எங்களுக்கும் அவசரம் அதனால சிரிச்சிடடே  பரவாயில்லை சார் என்று சொல்லிட்டே வந்தோம். ஒரு சின்ன உதவி அருமையான விஷயங்கள் ஒரு மணி நேரம் போனதே தெரியல அவர பீளமேட்டில் இறக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். நெனச்சுப் பாத்தா மக்கள் மனசுல எந்தவித வித்தியாசமும் இருக்கிறதா தெரியல.

      ஆனா எங்க எப்படி இந்த மத துவேஷங்கள் ஆரம்பிக்குதுன்னே தெரியலையே ஆனால் ஒன்னு மட்டும் உண்மை தமிழ்நாட்டுல சகோதரத்துவம் மாறாது என்ற நம்பிக்கை என் உயிர் உள்ள வரை இருக்கும்.

மழித்தலும் நீட்டலும்  வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.

Comments

  1. முற்றிலும் உண்மை

    ReplyDelete
  2. மனம் நெகிழ்ந்தது. //நெனச்சுப் பாத்தா மக்கள் மனசுல எந்தவித வித்தியாசமும் இருக்கிறதா தெரியல.//

    யெஸ்!! நல்ல பரந்த உள்ளம் கொண்ட அனுபவப் பதிவு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் ஒரு சின்ன அக்கறை கொஞ்சம் கனிவு இதுக்கு தாங்க நம்ம எல்லோரும் ஏங்கறோம்.மத்ததெல்லாம் சும்மா தான்.உங்க கருத்துப் பதிவவுக்கு நன்றி🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை