கல்யாண சாப்பாடு
ரொம்ப வருஷமா கல்யாணங்களுக்கே போகல.கொரோனாவும் ஒரு காரணம்.போன மாசம் நிறைய பத்திரிகைங்க வந்ததால் நானும் ஆசைப்பட்டு போனேன்.வேலைக்கு போயிட்டு இருக்கறப்ப ஏதாவது விசேஷம்னா சடஞ்சுக்குவேன்.இப்பதான் வேல வெட்டி இல்லையே அதனால் பிரச்சினை இல்லை. ஆனால் போன பின்ன பாத்தா ஏண்டா போனோம் னு ஆயிடுச்சு.அவ்ளோ கூட்டம் கொரோனா முடிஞ்சு போச்சு னு ஊரையே கூப்பிட்டு இருக்காங்க.குபீர்னு மனசுல பயம் வந்துச்சு ஆஹா சிக்கப்போறோமானு.பொண்ணு மாப்ளய பாத்து மொய் குடுத்தோம். இப்பல்லாம் gift வாங்கறதில்ல முதல்ல எல்லாம் நம்ம ஞாபகார்த்தமா இருக்கட்டும் னு கண்டிப்பா gift தான் குடுப்போம்.இப்ப மாறிட்டு.பையனோட அம்மா எண்ற ஊட்டுக்காரரோட சின்னவயசு family friends அவங்க அம்மாவும் எங்க மாமியாரும் ஜிக்ரி தோஸ்த் கண்டிப்பா சாப்பிட்டு போங்க னு சொல்ல dining hallக்குள்ள போனா எப்பா உக்காந்து சாப்பிடறவங்க பின்னாடி ஒரு line நிக்குது.ஆஹானு வெளியே வரலாம்னு பாத்தா திரும்ப முடியல அப்படியே நிக்க கொஞ்ச நேரத்தில ஆளுக்கு ஒரு பக்கம் இடம் கிடைக்க கட்லெட், sweet , இட்லி சாப்பிட்டு தோசை சாப்பிட ஆரம்பிச்சேன் பின்னாடி ஆளுங்க வந்து நிக்க ஆரம்பிச்சுட...