கல்யாண சாப்பாடு

 ரொம்ப வருஷமா கல்யாணங்களுக்கே போகல.கொரோனாவும் ஒரு காரணம்.போன மாசம் நிறைய பத்திரிகைங்க வந்ததால் நானும் ஆசைப்பட்டு போனேன்.வேலைக்கு போயிட்டு இருக்கறப்ப ஏதாவது விசேஷம்னா சடஞ்சுக்குவேன்.இப்பதான் வேல வெட்டி இல்லையே அதனால் பிரச்சினை இல்லை.

 ஆனால் போன பின்ன பாத்தா ஏண்டா போனோம் னு ஆயிடுச்சு.அவ்ளோ கூட்டம் கொரோனா முடிஞ்சு போச்சு னு ஊரையே கூப்பிட்டு இருக்காங்க.குபீர்னு மனசுல பயம் வந்துச்சு ஆஹா சிக்கப்போறோமானு.பொண்ணு மாப்ளய பாத்து மொய் குடுத்தோம். இப்பல்லாம் gift வாங்கறதில்ல முதல்ல எல்லாம் நம்ம ஞாபகார்த்தமா இருக்கட்டும் னு கண்டிப்பா gift தான் குடுப்போம்.இப்ப மாறிட்டு.பையனோட அம்மா எண்ற ஊட்டுக்காரரோட சின்னவயசு family friends  அவங்க அம்மாவும் எங்க மாமியாரும் ஜிக்ரி தோஸ்த் கண்டிப்பா சாப்பிட்டு போங்க னு சொல்ல dining hallக்குள்ள போனா எப்பா உக்காந்து சாப்பிடறவங்க பின்னாடி ஒரு line நிக்குது.ஆஹானு வெளியே வரலாம்னு பாத்தா திரும்ப முடியல அப்படியே நிக்க கொஞ்ச நேரத்தில ஆளுக்கு ஒரு பக்கம் இடம் கிடைக்க கட்லெட், sweet , இட்லி சாப்பிட்டு தோசை சாப்பிட ஆரம்பிச்சேன் பின்னாடி ஆளுங்க வந்து நிக்க ஆரம்பிச்சுட்டாங்க நமக்கு சீக்கிரம் சாப்பிடவும் தெரியாது . அப்படியே இலய மூடி வெச்சிட்டு வெளியே சுக்கு காபி குடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம்.

          வீடு போய் சேர்ந்தவுடனே பசிக்க ஆரம்பிச்சுடுச்சு.இனிமே கல்யாண சாப்பாடு ஆசப்படவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்ன நான் சொல்றது சரிதானே.

Comments

  1. அனுபவம் புதுமை.
     சாதாரணமாக இந்த மாதிரி டிபன் ஐட்டங்களானால் பப்பே முறையில் வைத்து விடுவார்கள். விரும்பியதை வேண்டியதை சாப்பிடலாம். 
    Jayakumar

    ReplyDelete
  2. ஆஹா பப்பே அனுபவம் அடுத்த தலைப்பு நன்றி சார்

    ReplyDelete
  3. ஹாஹாஹ கல்யாண சாப்பாடு எல்லாம் கூட்டத்தை விடுங்க...இப்பா சாப்பிடும் நிலையிலும் இல்லையே...கடைசில குடிச்சீங்க பார்ங்க சுக்கு காபி அதுதான்!!! ஆகச் சிறந்தது!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் உண்மைதான் சார்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை