இயற்கை

என்ன திடீர்னு இயற்கை ய பத்தி புதுசா ஏதாவது கண்டுபிடிச்சியானு கேக்கறீங்களா.ஆமாங்க சமீபமா துபாய்க்கு போனேன் எனக்கும் passport ல மத்த நாட்டு stamp இருக்கணும் னு ஆசை ஆனா நான் போன இடம் தான் சரியில்லைன்னு தோணுச்சு வானுயர்ந்த கட்டடங்கள் என்ன அவ்வளவா ஈர்க்கல என் பையன் அப்பவே சொன்னான் அம்மா சிலோன் போயிட்டு வா உனக்கு பிடிக்கும் னு ஆனா ஒண்ணு சொல்லணும் இயற்கையவே செயற்கையாக பண்ணியிருக்கறது அற்புதம் தான்.எனக்கு இயற்கையின் அழக இங்க சொல்லணும் னு தோணுச்சு அதான். பச்சப்பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கற வயல்கள பாக்கும் போது சின்னக்குழந்தைங்க சிரிக்கற மாதிரி அப்படியே அள்ளிக்கணும் போல இருக்கும்.இந்த தென்னைமரம் இருக்கே பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தாங்க னு படிச்சிருப்போம் ஆனா இளநீர் ங்கற அமுதத்தை குடுக்குது பாருங்க இன்னைக்கு நான் இருக்கேன் னா அதுக்கு முக்கிய காரணம் இதாங்க. காடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல காடுகள் சுத்தி வளர்ந்ததனாலயோ என்னவோ. காட்டுக்குள்ள நுழையும் போது நல்லா இருக்கியா னு பாசமா என்ன...