இயற்கை

         என்ன திடீர்னு இயற்கை ய பத்தி புதுசா ஏதாவது கண்டுபிடிச்சியானு கேக்கறீங்களா.ஆமாங்க சமீபமா துபாய்க்கு போனேன் எனக்கும் passport ல மத்த நாட்டு stamp இருக்கணும் னு ஆசை ஆனா நான் போன இடம் தான் சரியில்லைன்னு தோணுச்சு வானுயர்ந்த கட்டடங்கள் என்ன அவ்வளவா ஈர்க்கல என் பையன் அப்பவே சொன்னான் அம்மா சிலோன் போயிட்டு வா உனக்கு பிடிக்கும் னு ஆனா ஒண்ணு சொல்லணும் இயற்கையவே செயற்கையாக பண்ணியிருக்கறது அற்புதம் தான்.எனக்கு இயற்கையின் அழக இங்க சொல்லணும் னு தோணுச்சு அதான்.





           பச்சப்பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கற வயல்கள பாக்கும் போது சின்னக்குழந்தைங்க சிரிக்கற மாதிரி அப்படியே அள்ளிக்கணும் போல இருக்கும்.இந்த தென்னைமரம் இருக்கே பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தாங்க னு படிச்சிருப்போம் ஆனா இளநீர் ங்கற அமுதத்தை குடுக்குது பாருங்க இன்னைக்கு நான் இருக்கேன் னா அதுக்கு முக்கிய காரணம் இதாங்க.

      காடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல காடுகள் சுத்தி வளர்ந்ததனாலயோ என்னவோ. காட்டுக்குள்ள நுழையும் போது நல்லா இருக்கியா னு பாசமா என்ன கேக்கற மாதிரியே இருக்கும்.அந்த மெல்லிய மூலிகை நறுமணம் மெய்மறக்க செய்யும்.அதுல சின்னதா நீரூற்று இருந்துட்டா அதாங்க சொர்க்கம்.




        நம்ம நாட்டு மலைகள் என்ன மலைக்க வைக்கும் எத்தனை வருஷமா நான் இருக்கேன் நீ என்ன பெரிய பெருமை அடிச்சுட்டு இருக்கேனு மண்டைல கொட்டற மாரியே இருக்கும். திடகாத்திரமா இருக்கற மலை மேல ஏறி நின்று கத்தறது ரொம்ப பிடிக்கும் இப்போ ரெண்டு காலும் ரிப்பேர்ங்கறதால யோசிக்க வேண்டியதா இருக்கு .இனி குச்சி ஊனி ஏறி பாக்கணும். விடறதா இல்ல.




        பூக்களின் சுகந்தம் அழகும் அப்படியே சந்தோஷத்தை அள்ளித் தரும்.நாளைக்குள்ளாற உதுந்து போறதுன்னாலும் இன்னைக்கு எவ்ளோ சந்தோஷமா .கத்துக்க வேண்டிய பாடம்.

காட்டு மலர்கள் அலட்சியமா பூத்து பரவியிருக்கற அழகே தனி.




           எனக்கு பிரமிக்க வைக்கிறது நம்ம கடல் மாதா ஆஹா வானமும் கடலும் சேந்துட்டா அங்க வர்ணஜாலம் தான் ‌.கடல் முன்ன உக்கார்ந்து அலையோட சத்தம் அதன் பிரமாண்டம் தக்குனூண்டு இருந்துட்டு என்னா வாய் பேசுறனு டப்டப்னு அறையும் அழகு அப்படியே நாம அதுல கரையற மாதிரி தோணும்.





☐  

   மொட்ட மாடிக்கு போனாவே போதும் என்ன மெய் மறக்க வைக்கற  வானம் அது கூட நிலா நட்சத்திரம் மேகம் என்ன சொல்ல விதவிதமான மேகக் கூட்டங்கள் சிங்கம் போல மான் போல ஓநாய் போல அதிலும் சூரியன் மறையும் போது காணக்கண்கோடி வேண்டும்.











     இயற்கை நிறைய சொல்லி தருது நிறைய சந்தோஷம் தருது நமக்கு தான் புரியறதில்ல.





Comments

  1. அருமை யா சொல்றீங்க ஒவ்வொரு வரியையும் அப்படியே டிட்டோ செஞ்சுக்கோங்க. நானும் இயற்கையின் காதலி! அப்புறம் போக முடிய்மோ பார்க்க முடியுமோ முடியாதோன்னு ஃபோட்டோவா எடுத்து தள்ளிடுவேன்...ப்ளாக்லயும் பகிர்ந்து வைத்துக் கொள்வது வழக்கமா போச்சு. அதுவும் கடல் மலை பத்தி சொல்லிருக்கறது சூப்பர்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி🙏. காடுகள் மலைகள் தேவன் கலைகள்.😄

      Delete
  2. இயற்கையை வெல்ல முடியுமா சொல்லுங்க...அது தரும் அமைதி, பிரமிப்பு, தியானம் போல!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிறைய ஆடம்பரமான வாழ்க்கை வாழ எல்லோருக்கும் பிடிக்குது.ஆனா ஒரு கட்டத்துக்கு மேல எதுவுமே நிரந்தரம் இல்லை னு அறிய வெக்கறது இயற்கை தாங்க.🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா