இடமா படமா
போன வாரம் முழுவதும் அலுவலக பரபரப்பு வீட்டுக்காரருக்கு வெள்ளிக்கிழமை நடந்த meeting நல்லா போச்சு அதனால எங்காவது போலாமேனு யோசிச்சப்போ ரொம்ப நாளா காந்தலூர் போக முடிவு பண்ணிட்டு முடிவு மட்டுமே தூங்க போயாச்சு . காலைல எப்பவும் போல டீ குடிச்சிட்டு போலாம்னு confirm பண்ணி bagல dressலாம் எடுத்து வெச்சு போனாப்போகுதுன்னு அவருக்கு ஒரு hoodies எனக்கு sweater மட்டுமே குளிர் அவ்வளவா இருக்காதுன்னு நினைச்சு வெச்சாச்சு.சுமார் ஏழரைக்கு கிளம்பி போயிட்டு இருக்கும் போது ரூம் புக் பண்ண இவர் யாருக்கோ போன் பண்ண அவர் மறையூர் தங்கலாமேனு சொல்ல நான் tension ஆயிட்டேன் தங்குனா காந்தலூர் இல்லை னா நான் வரலை னு சண்டை ஆரம்பம். அப்புறம் அந்த நண்பரே கூப்பிட்டு ஒரு contact no. குடுத்தார்.போய் பாருங்க னு .மறையூர் செம வெயில் அத தாண்டி இறைச்சல்பாறானு அருவி ஆஹா தூவானம் அருமை அருமை.அப்படிக்கா காந்தலூர் போய் ஒரு பார்வை சுத்தி மலைகளும் அதனைப்போர்த்திய மேகமூட்டமும் ஆஹாதேவலோகத்தில் இருக்கிறேனானு சந்தேகம் வந்தது.அப்டியே குளிர் அள்ள இரு...