இடமா படமா
போன வாரம் முழுவதும் அலுவலக பரபரப்பு வீட்டுக்காரருக்கு வெள்ளிக்கிழமை நடந்த meeting நல்லா போச்சு அதனால எங்காவது போலாமேனு யோசிச்சப்போ ரொம்ப நாளா காந்தலூர் போக முடிவு பண்ணிட்டு முடிவு மட்டுமே தூங்க போயாச்சு .
காலைல எப்பவும் போல டீ குடிச்சிட்டு போலாம்னு confirm பண்ணி bagல dressலாம் எடுத்து வெச்சு போனாப்போகுதுன்னு அவருக்கு ஒரு hoodies எனக்கு sweater மட்டுமே குளிர் அவ்வளவா இருக்காதுன்னு நினைச்சு வெச்சாச்சு.சுமார் ஏழரைக்கு கிளம்பி போயிட்டு இருக்கும் போது ரூம் புக் பண்ண இவர் யாருக்கோ போன் பண்ண அவர் மறையூர் தங்கலாமேனு சொல்ல நான் tension ஆயிட்டேன் தங்குனா காந்தலூர் இல்லை னா நான் வரலை னு சண்டை ஆரம்பம்.
அப்புறம் அந்த நண்பரே கூப்பிட்டு ஒரு contact no. குடுத்தார்.போய் பாருங்க னு .மறையூர் செம வெயில் அத தாண்டி இறைச்சல்பாறானு அருவி ஆஹா தூவானம் அருமை அருமை.அப்படிக்கா காந்தலூர் போய் ஒரு பார்வை சுத்தி மலைகளும் அதனைப்போர்த்திய மேகமூட்டமும் ஆஹாதேவலோகத்தில் இருக்கிறேனானு சந்தேகம் வந்தது.அப்டியே குளிர் அள்ள இருக்குற ரெண்டு pant sweater எல்லாம் போட்டு quilt இழுத்து போர்த்தி திரும்பி பாத்தா ஆத்துக்காரர் வண்டி ஓட்டிய அசதில தூங்கியாச்சு மணி பாத்தா அஞ்சரை தான் நம்ம குளிர்ல என்ன பண்ண டீவிய ஆன் பண்ணா you tube ல மலையாள படமா வந்து ரெண்டு மூணு ஓட்டி விட்டு மீரா ஜாஸ்மின் படம் சரின்னு பாக்க ஆரம்பிச்சேன்.படம் பேரும் தெரியல.மனசு அப்படியே பாரமாயிடுச்சு.பெண்குழந்தைகள் படிப்பு எப்படி நாசம் பண்றாங்க னு.
அம்மா எட்டாவது படிச்ச அப்புறமா பள்ளிக்கூடம் அனுப்பல. நாங்க பெண் பிள்ளைகள் நல்லா படிச்சு college அனுப்புனதுல அம்மா அவ்ளோ சந்தோஷப்பட்டாங்க.இந்தப்படத்த பாத்த பின்ன வீட்டுக்காரர் கிட்ட சொன்னேன் நான் குடுத்து வெச்சவ அப்பா என்னை எல்லாம் படிக்க வெச்சாருனு. அப்பாடா இப்போ தான் இப்படி சொல்ற இல்லை னா படிக்காம இருந்து இருக்கலாம் னு எப்ப பாரு புலம்புவேனு.
சரி சரி அந்த படம் என்ன னு Google பண்ணி பாத்தா 2003ல வந்த "பாடம் ஒண்ணு - ஒரு விலபம் " மீரா best actress வாங்குன படமாம்.மலையாள படங்கள் எந்த பகட்டும் இல்லாம எவ்ளோ அழகா இருக்கு.அப்புறம் என்ன செம hill view பாத்துட்டு சப்பாத்தி சிக்கன் குருமா சாப்பிட்டு தூங்கியாச்சு.காந்தலூர் எதிர்பாராத அளவு அழகான மலைகளும் அருவிகளும் சூழ் கிராமம். அனுபவம் அழகு.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteReally superb
ReplyDelete