மழையும் புயலும்
இயற்கையை நேசிக்கறவங்க மழைய நேசிக்காமஇருப்பாங்களா.எல்லாரப்போலத்தான் நானும் என்ன இப்போ தொப்பலா நனையறதில்ல மத்தபடி மழய ரசிக்கறதோட பாட்டும் தானா வரும் . கடல் அந்த அலைகள் அந்த சந்தோசத்தில் ஆடறது எல்லாம் சுனாமிக்கு அப்புறம் அப்படியே காணாம போயிடுச்சு.ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா மறுபடியும் ரசிக்க ஆரம்பிச்சேன். போன மாச கடைசில இவருக்கு சென்னைக்கு மாறுதல் .போன அன்னைக்கே மழை .மழைன்னு சொல்றத விட தூறல் தான் மூணாவது மாடில தங்கியிருந்தப்போ ஜன்னல் வழியே பாத்துட்டு இருந்தேன் ரெண்டு புறா அழகா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்துச்சு. படம் பிடிக்க கூட அசையல நான் அசஞ்சா அது பறந்து போகும் பாவம் மழைல ன்னு அப்படியே அசையாம நின்னேன். அடுத்த நாள் காலைல சாப்பிட கூட்டிட்டு போனார்.ரோடு முழுசும் சகதி தண்ணீ சாக்கடை லேருந்து கொந்தளிச்சுட்டு வருது அவ்ளோ குப்பை அடைச்சு இருக்கணும் அப்பவே நினைச்சேன் மழை தீவிரமாச்சுன்னா நிலைமை மோசமாகிடுமேன்னு.ரெண்டு நாள்ல கோவைக்கு வந்துட்டோம்.ஆட்டோக...