மழையும் புயலும்

            இயற்கையை நேசிக்கறவங்க மழைய நேசிக்காமஇருப்பாங்களா.எல்லாரப்போலத்தான் நானும் என்ன இப்போ தொப்பலா நனையறதில்ல மத்தபடி மழய ரசிக்கறதோட பாட்டும் தானா வரும் ‌.

       கடல் அந்த அலைகள் அந்த சந்தோசத்தில் ஆடறது எல்லாம் சுனாமிக்கு அப்புறம் அப்படியே காணாம போயிடுச்சு.ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா மறுபடியும் ரசிக்க ஆரம்பிச்சேன்.

     போன மாச கடைசில இவருக்கு சென்னைக்கு மாறுதல் .போன அன்னைக்கே மழை .மழைன்னு சொல்றத விட தூறல் தான் மூணாவது மாடில தங்கியிருந்தப்போ ஜன்னல் வழியே பாத்துட்டு இருந்தேன் ரெண்டு புறா அழகா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்துச்சு. படம் பிடிக்க கூட அசையல நான் அசஞ்சா அது பறந்து போகும் பாவம் மழைல ன்னு அப்படியே அசையாம நின்னேன்.

            அடுத்த நாள் காலைல சாப்பிட கூட்டிட்டு போனார்.ரோடு முழுசும் சகதி தண்ணீ  சாக்கடை லேருந்து கொந்தளிச்சுட்டு வருது அவ்ளோ குப்பை அடைச்சு இருக்கணும் அப்பவே நினைச்சேன் மழை தீவிரமாச்சுன்னா நிலைமை மோசமாகிடுமேன்னு.ரெண்டு நாள்ல கோவைக்கு வந்துட்டோம்.ஆட்டோக்கு உள்ள தண்ணீ பஸ் அப்படியே மெதந்துட்டு வருது.அப்பவும் நான் enjoy பண்ணிட்டு தான் வந்தேன்.

     ரெண்டு நாள் கழிச்சு மழை புயல் பேயாட்டம் ஆடி மக்களின் சராசரி வாழ்க்கை எல்லாம் மாறிப் போய் பார்க்க பார்க்க ஏனோ இயற்கை ரசிப்பதற்கு இல்லனு  பயம் ஏற்படுத்தி விட்டுருச்சு.இந்த மழை மட்டும் கோவைல பெஞ்சதுன்னா கோவையே காணாம போயிடும்.இனியும் இயற்கை கிட்ட இருந்து நம்மள பாதுகாக்க பாதுகாப்பு முறைமைகள் செய்யலேன்னா நாம வாழறதே வீண் தான்.

       அப்பா அணைகளை தூர் வாரி ரெடியா வெச்சிருப்பார் மழைக்காக தூர் வாருன அளவ மூங்கில் குச்சி வெச்சு அவரே அணைக்குள்ள இறங்கி அளப்பார். ஏனோ ஞாபகம் வருதே.

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை