பேய் உணர்வு
இங்கே சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. பயப்படக்கூடாது.தைரியமாப் படிக்கணும் ராத்திரியில் வூட்டுக்காரர எழுப்பி பயம்மா இருக்குபானு சொல்லக்கூடாது. சுமார் முப்பது வருஷத்துக்கு முன்ன நான் கல்யாணம் ஆகாத தைரியமான பாரதி கண்ட புதுமைப்பெண்.அண்ணாமலை பாலிடெக்னிக் சிதம்பரம்ல paper valuation அப்பல்லாம் ஒரு department papers னா தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் கூடுவோம் . கோவைலேருந்து அஞ்சாறு பேரு ladies இருப்போம்.போனா அங்கே college கு முன்னாடி இருக்கற guesthouse ல தங்கணும். மேல ரெண்டு ரூம் கீழே ரெண்டு ரூம். எல்லோரும் கோயிலுக்கு போலாம்னு கிளம்ப நான் டயர்டா இருக்கு வரலைனு சொல்லி கதை புக் படிக்க ஆரம்பித்தேன். அந்த guset house சுத்தி மழைத்தண்ணி அதனால் தவளை சத்தம் வேற.சரியா 7மணிக்கு கரெண்ட் போச்சு.நல்ல வேளை அங்கே மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் இருக்க பத்த வெச்சுட்டு படுத்தேன்.முதுகு பக்கமா மூச்சு விடற சத்தம் பாம்பு ஏதாவது இருக்குமோன்னு மெழுகுவ...