அம்மாவின் குரல்
என்னமோ தெரியல இன்னைக்கு அம்மா ஞாபகம் அதிகமாவே வருது.எனக்கும் அம்மாவுக்கும் உள்ள attachment கம்மி.ஆனா என்னால் கஷ்டப்பட்டதென்னவோ அம்மாதான் .2011ல ஊட்டிக்கு transfer வந்தப்போ தினமும் phone ல அழுதிருக்கேன்.அம்மா நீ போகாத எவ்ளோ நாள் னாலும் leave போட்டு இருனு சொல்லிட்டே இருந்தாங்க.அம்மாகிட்டனு இல்லை எல்லார் கிட்டயும் கண்டிப்பா பேசியே பழகிட்டேன்.ஒட்டுதலும் கம்மியா ஏன்னா சின்ன வயசுல ஏற்பட்ட பேரிழப்பு என்னால இன்ன வரை மீள முடியல. அம்மா எவ்வளவோ சொல்லியும் அடுத்த குழந்தைனு போகாததுக்கு ரெண்டு முக்கிய காரணம் என் பிரசவ காலத்தில் அம்மா பட்ட கஷ்டங்கள் அப்புறம் என் மகன் இடத்தில் இன்னோர் குழந்தைக்கு இடமில்லை என்று.அம்மா கஷ்டப்படக்கூடாதுன்னு நானும் நான் கஷ்டப்பட்டுடக் கூடாதுன்னு அம்மாவும் வாழ்ந்தோம்.அதுவும் அந்த December மாசம் முதல் வாரத்திலேயே எனக்கு BP ஏறி வீட்டிலேயே drips போட்டு இருந்த போது அம்மா phone போட வசீம் கிட்ட தூங்கறேன்னு சொல்ல சொன்னேன் ஏன் னா அழுவேன் அம்மா உடனே வரணும் னு நினைப்பாங்க பாவம்.அரை மணிநேரம் கழிச்சு திரும்ப அ...