அம்மாவின் குரல்
என்னமோ தெரியல இன்னைக்கு அம்மா ஞாபகம் அதிகமாவே வருது.எனக்கும் அம்மாவுக்கும் உள்ள attachment கம்மி.ஆனா என்னால் கஷ்டப்பட்டதென்னவோ அம்மாதான் .2011ல ஊட்டிக்கு transfer வந்தப்போ தினமும் phone ல அழுதிருக்கேன்.அம்மா நீ போகாத எவ்ளோ நாள் னாலும் leave போட்டு இருனு சொல்லிட்டே இருந்தாங்க.அம்மாகிட்டனு இல்லை எல்லார் கிட்டயும் கண்டிப்பா பேசியே பழகிட்டேன்.ஒட்டுதலும் கம்மியா ஏன்னா சின்ன வயசுல ஏற்பட்ட பேரிழப்பு என்னால இன்ன வரை மீள முடியல.
அம்மா எவ்வளவோ சொல்லியும் அடுத்த குழந்தைனு போகாததுக்கு ரெண்டு முக்கிய காரணம் என் பிரசவ காலத்தில் அம்மா பட்ட கஷ்டங்கள் அப்புறம் என் மகன் இடத்தில் இன்னோர் குழந்தைக்கு இடமில்லை என்று.அம்மா கஷ்டப்படக்கூடாதுன்னு நானும் நான் கஷ்டப்பட்டுடக் கூடாதுன்னு அம்மாவும் வாழ்ந்தோம்.அதுவும் அந்த December மாசம் முதல் வாரத்திலேயே எனக்கு BP ஏறி வீட்டிலேயே drips போட்டு இருந்த போது அம்மா phone போட வசீம் கிட்ட தூங்கறேன்னு சொல்ல சொன்னேன் ஏன் னா அழுவேன் அம்மா உடனே வரணும் னு நினைப்பாங்க பாவம்.அரை மணிநேரம் கழிச்சு திரும்ப அவ தூங்க மாட்டாளே இவ்ளோ நேரமான்னு phone .ஒரு ரெண்டு மணி நேரம் கழித்து நான் கொஞ்சம் தெளிஞ்சு பேசுனேன்.ஆனா drips போட்டு இருக்கேன் னு சொல்லல.
அதே மாசத்துல வசீம் ரெண்டாவது முறையா கால் fracture பண்ணிட்டான்.அப்பவும் அம்மா கிட்ட மெதுவா தான் சொன்னேன்.அம்மா நானும் அன்னைக்கு கீழே தடுமாறி விழுந்துவிட்டேன் அடியெல்லாம் படலன்னு மெதுவா சொன்னாங்க நான் திட்டுவேன்னு பயம். பதினஞ்சு நாள் தான் அம்மா இறந்துவிட்டார்.
அம்மா phone பண்ணும் போது ஏதாவது வேலயா இருப்பேன்.சலிச்சுக்குவேன் கொஞ்ச நேரம் கழிச்சு தான் பேசுவேன்.அவங்க இறக்கறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி வசீம் அம்மா கிட்ட new year celebrate பண்ண போனான்.அன்னைக்கு அடுத்த நாள் பன்னெண்டு மணிக்கு அம்மா phone பண்ணி horlicks மட்டும் குடிச்சுட்டு கிளம்பிட்டான் வந்துடுவான்னு சொன்னாங்க.அதுதான் அம்மா என் கிட்ட பேசுன கடைசி பேச்சு.அவரோடது கணீர் னு தெளிவான குரல்.
இரவு ஏதோ சண்டை அம்மா கிட்ட பேசணும் போல இருந்தது நிறைய தடவை ஆனா பாவம் அம்மா இப்போ பேசுனா கஷ்டப்படுவாங்கன்னு அழுதுட்டே தூங்கிட்டேன்.காலைலயே phone வருது இறந்துட்டாங்கன்னு.அம்மாவ குளிப்பாட்ட நானும் நின்னேன் முதுகுல பெரிய கீறல் கீழே விழுந்ததுனால. யாரா இருந்தாலும் பேசணும்னு தோணுச்சுனா பேசிடணும் தப்போ சரியோ .
ஏனோ தெரியலை அப்பா இறந்து முப்பத்து மூன்று வருஷத்துல ரெண்டு மூணு தடவை தான் கனவுல வந்து இருப்பார் அம்மாவும் அப்படியே.என்மேல அவங்களுக்கு பாசம் இல்லை யா இல்லை வந்தா நிறைய வருத்தப்படுவேன்னு வர்றதில்லயா தெரியல. hmmm .
கனத்த நினைவுகள், சுமையாக இருந்தாலும் நினைக்கும் போது சுகமாக இருக்கும் தானே... நன்றி
ReplyDeleteம்ம் உண்மை.நன்றி விமலா
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஅருமை
ReplyDelete