இந்த தலைப்பு எடுத்து கிட்ட தட்ட ஒரு மாசம் இருக்கும்.ஏனோ எழுத வார்த்தைகள் கோர்வையா வரல.ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்.எத்தனை உண்மை ரோட்ல நடக்கவே பயப்படற பொண்ணு நான் அந்த அளவுக்கு அப்பா தோள்லயே வளர்ந்தேன்.college சேர்ந்த பின்ன அப்பா சொன்ன வார்த்தை நீ சூரியன் மா நாய்கள் குலைக்கத்தான் செய்யும் போயிட்டே இருக்கணும் னு. எந்த அளவுக்கு positive வார்த்தை என்னை encourage பண்ணுதோ அதே அளவு negative வார்த்தை என்னை உடைஞ்சு போகவும் வைக்கும் அப்போ எல்லாம் எனக்கு நானே பாடிக்கற பாட்டு சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கை விடுவாரோ சோர்ந்து போகாதே. வார்த்தைகளின் பலம் மிகமிக அதிகம் .என் கடின காலத்தில் என் மகன் சொன்ன வார்த்தைகள் அம்பது வருஷம் வாழ்ந்திருக்க ஏழு மாசம் பொறுத்துக்க மாட்டியா. அழறியாமா சரி அழுது முடிச்சு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் வேற வேல...