வார்த்தைகள்
இந்த தலைப்பு எடுத்து கிட்ட தட்ட ஒரு மாசம் இருக்கும்.ஏனோ எழுத வார்த்தைகள் கோர்வையா வரல.ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்.எத்தனை உண்மை
ரோட்ல நடக்கவே பயப்படற பொண்ணு நான் அந்த அளவுக்கு அப்பா தோள்லயே வளர்ந்தேன்.college சேர்ந்த பின்ன அப்பா சொன்ன வார்த்தை நீ சூரியன் மா நாய்கள் குலைக்கத்தான் செய்யும் போயிட்டே இருக்கணும் னு.
எந்த அளவுக்கு positive வார்த்தை என்னை encourage பண்ணுதோ அதே அளவு negative வார்த்தை என்னை உடைஞ்சு போகவும் வைக்கும் அப்போ எல்லாம் எனக்கு நானே பாடிக்கற பாட்டு சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கை விடுவாரோ சோர்ந்து போகாதே.
வார்த்தைகளின் பலம் மிகமிக அதிகம் .என் கடின காலத்தில் என் மகன் சொன்ன வார்த்தைகள் அம்பது வருஷம் வாழ்ந்திருக்க ஏழு மாசம் பொறுத்துக்க மாட்டியா. அழறியாமா சரி அழுது முடிச்சு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் வேற வேலய பாரு .ஆனா அவனே இப்போ தடுமாறி பேசறான் முடியலமா எப்ப பாரு ரத்தமும் ஆபரேஷனும் னு எனக்கு சமாதானம் சொல்லத் தெரியல கலங்கிடறேன்.
எனக்கு ஆபரேஷன் பண்ண டாக்டர் அப்படி நினைச்சு இருந்தா உன் அம்மா உயிரோடு இருக்க முடியுமானு கேட்டேன். மறுபக்கம் பேச்சு இல்லை.எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் நல்ல வார்த்தைகள் தேவைப்படும் சோர்ந்து போகாமல் இருக்க.பத்திரமா இரு take care stay blessed இதெல்லாம் இந்த வயசுல ரொம்ப பிடிக்கும் வார்த்தைகள்.
பொய்யான வார்த்தைகள நிறைய பேர் உபயோகிக்கறாங்க நமக்கு வரமாட்டேன்கிறது.ஆனா நம்ம வளர்ச்சி நல்ல வார்த்தைகளால இல்லை யாராவது தாழ்த்தியோ கேவலமாக பேசறதில தான் இருக்கு.
கோயம்புத்தூர் ல வாடகை வீடு தேடி அலைஞ்சப்போ மதத்தை காரணம் காட்டி குடுக்காதப்போ தான் நம்மளும் வீடு கட்டணும் னு தோணுச்சு.
கெட்ட வார்த்தை பேசுனா வாயில புண்ணு வரும் னு நான் பேசுனதே இல்ல ஆனா வாய் முழுசா புண்ணாகி தண்ணீர் குடிக்கவே பல மாசம் கஷ்டப்பட்டப்போ என்ன தவம் செய்தனை😀.இப்போ எதாவது கெட்ட வார்த்தை பேசுவேன் வேணும்னே எங்க வீட்டுல சொல்வார் சே நீ எல்லாம் பேசாத நல்லா இல்லனு இன்னார் தான் பேசணும்னு இருக்கா என்ன😂😂😂😂
Well Narrated. It's different ,& unique, ur way of expressing the reality which u hv learned & experienced . Nice to read
ReplyDelete.
Thank you
Delete