முடி திருத்தம்

முதல் பதிவு என்னடா எடுத்தவுடன் முடி திருத்தம் னு பாக்கறீங்களா. சென்ற ஆண்டு இதே நாளில் என் மகன் கையால் மொட்டை அடித்து கொண்டேன்.ஏன்னா ரெண்டாவது கீமோ முடிஞ்சு  ரெண்டு நாள்ல முடி கொத்து கொத்தா கைல வந்தது அம்மா மொட்டை அடிச்சுக்கோ.அடித்தபின் பார்த்தா அத்தனை அழகு.ஒரு வருடம் முடிவதற்குள் மூன்று முறை அடித்துக்கொண்டேன். இப்போ முடி வளர்ந்து விட்டது.முடி திருத்துபவர் வந்திருக்கிறார்.boycut வைக்க போறேன்.கொஞ்ச நாளைக்கு பிறகு முடி வளர்க்கலாம்னு.
கொரோனா பயத்தில் அவன் அவன் இருந்தா முடிய பத்தி எழுதறேன்னு பாக்றீங்களா. இழந்தாதாங்க அருமை தெரியும்.

Comments

  1. வாழ்பவர் வீழ்வதும் வீழ்பவர் மீள்வதும் வாழ்வின் பரமபதம் மீள்தலின் வலிமை
    'முடீ'தலில் தொடங்குகிறது.👍

    ReplyDelete
  2. நமஸ்காரம். வலியும் வேதனையும் நமக்கு வந்தால் தான் தெரியும் என்பர். அதை அனுபவித்து அனுபவித்து எல்லாம் வல்ல இறைவன் கருணையினால் முழுவதும் வெளி வர இருக்கும் தோழியே உங்கள் முகம் பார்த்து அவ்வலியை நாம் உணர்ந்தோம். காலமும் கடவுளும் நம்மை சுற்றி அடித்து சில விஷயங்களை புரிய வைக்க முயற்சிக்கும். சிலர் புரிந்து மாறுவர். பலர் புரியாமல் கவலையில் வாழ்வர். நீங்கள் சிலரில் ஒருவர். சிறந்தவர். இன்னும் உணர முயற்சிப்போம் உயிர் பூமியில் உள்ள வரை. நீங்கள் தொடர்ந்து உங்கள் உள்ளத்தை எழுத்துக்கள் ஆக்குக. உம் உணர்வுகளை படிப்பினை ஆக்குங்கள். எங்களை திருத்துங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்து அனுபவித்து முற்றிலும் உண்மை.வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Very emotional facts....at end it's truly inspiring... makes us stronger and believe anything is possible with a good will n attitude...you say it's a boy cut for me it's a Diana's cut...stay beautiful n stay blessed

    ReplyDelete
  5. இழந்தாதாங்க அருமை தெரியும் - உணர்வுபுரனமான வார்த்தைகள்.

    தலைமுடி இழப்பையும் அழகான வரிகளாக்கிய சகோவுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இழந்தாதாங்க அருமை தெரியும் - உணர்வுபுரனமான வார்த்தைகள்.

    தலைமுடி இழப்பையும் அழகான வரிகளாக்கிய சகோவுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பெற்றது நிறைய நண்பர்களை வருகைக்கு நன்றி சகோ🙂

      Delete
  7. U and ur heart r always beautiful mam..one of my favorite inspiration..u had a great comeback..luv u always ❤❤

    ReplyDelete
  8. வலிகளை வலிமயாய் கையாண்டு,
    கடுமை கஷ்டத்திலும்
    அழகு கண்டு
    எதுவும் கடந்து போகும்
    என உணர்வு பூண்டு
    பாரதியின் புதுமை
    நோக்கம் கொண்டு
    நட்புகளை ஆறுதல் படுத்தும் பூச்செண்டு
    எளிமை இனிமைஇத்தளம்
    தொடரட்டும் பல்லாண்டு!!

    ReplyDelete
    Replies
    1. கருத்து சொல்வதிலும் கவிதை.எழுதத்தூண்டும் நல்வாழ்த்துக்கள் நன்றி சகோ

      Delete
    2. ஃபீனிக்ஸ் பறவையே வாழ்க நீ பல்லாண்டு

      Delete
    3. நன்றி சகோ 🙂

      Delete
  9. உங்கள் வலையின் பெயரே! அதுவே சொல்லிவிட்டதே!

    பிரார்த்தனைகள்!

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  10. உங்கள் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன். கவலைப்படாதீர்கள்! என் உடன் பிறந்த சகோதரிக்கும் மார்பகப் புற்று நோய்ப் பிரச்சினையால் (3 வருடம் முன்பு) கீமொ பலமுறை எடுத்துக்கொண்டாள். முதல் கீமோவில் முடியிழந்தாள். ஆனால் தைரியசாலி. மொட்டை அடித்துக்கொண்டாள். ஆறு மாதத்திலேயே பழையபடி வளர்ந்துவிட்டது. டாக்டர் சாந்தா தான் கவனிக்கிறார். இப்போது அவள் நலமாகவே இருக்கிறாள். உங்களின் முன்னேற்றமும் அதுபோலவே நிகழும் என்பது உறுதி. மருத்துவ ஆலோசனையை முழுவதுமாகக் கடைப்பிடித்தால், வீட்டினரின் அன்பே உங்களைக் குணப்படுத்திவிடும். வாழ்த்துக்கள்!



    ReplyDelete
  11. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.உண்மை வீட்டினரின் அன்பும் நண்பர்களின் பாசமும் இருந்தால் போதும் 😊🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா