காக்கிநாடா பயணம்

    திடீர்னு ஒரு சந்தர்ப்பம் காக்கிநாடா போக.அது என்ன காக்கிநாடா அங்கே இருந்தவர்களும் இங்கே என்ன வேலை யா வந்தீங்க னு ஆச்சரியமா கேட்டாங்க.75 வருஷத்துக்கு முன்ன 1948ல எங்க அப்பா engineering இங்கே படிச்சாரு அந்த college பாக்க வந்தோம் னு சொன்னோம்.now it has become University நெகிழ்ச்சியான தருணங்கள்.🥰

            சென்னை லேருந்து விசாகப்பட்டினம் போக train ஏற வந்தா railway station ல கிட்ட தட்ட நாலாயிரம் பேர் நிக்கறாங்க நடுங்க ஆரம்பிச்சது ஏதாவது சொன்னா திட்டு விழும் னு பேசாம ஏற நல்ல வேளை பெட்டிக்குள் யாரும் வரலை. அங்கே நிறைய கடற்கரைகள் ரெண்டு நாள்ல நாலு கடற்கரை னு யோசிச்சு முதல்ல dolphin light house போனோம் சின்ன வயதில் சென்னை light house  ஏறுனது.தம் பிடிச்சு மேலே ஏறி பார்த்தா ஆஹா கடலின் அழகு வங்காள விரிகுடா பரந்து கப்பல்களுடன்.🤩

                  அங்கேருந்து அப்படியே yarada கடற்கரைக்கு போக ஒரு பக்கம் மலை மத்த பக்கம் எல்லா கடல் எங்க ஆத்துக்காரர் நடந்துட்டே என்ன போட்டோ எடுக்க ரெண்டு பசங்க பின்னாடியே வந்து நீங்க couplesஆனு கேக்க நாங்க முழிச்சோம்.உங்க ரெண்டு பேரையும் வீடியோ எடுத்து இருக்கேன் என் instagram  போட்டுக்கிட்டானு கேக்க எங்களுக்கு ஒரே குஷி அந்த பசங்க கேக்குறாங்க நீங்க எப்படி இவ்ளோ சேந்து இருக்கீங்க னு நாங்க ரெண்டு நிமிஷம் முன்ன கூட சண்டை போட்டோம்னு சொல்லி சிரிச்சோம்.ரொம்ப நாழி பேசிட்டு அந்த பையன் எங்கள எடுத்த போட்டோ எல்லா அனுப்பிச்சு அவனோட insta ல age is just a number னு video ல போட்டு இருந்தான்.🥳

                அடுத்த நாள் RK beach ல இருந்த submarine museum உள்ள போனா ஒண்ணும் புரியல ஆச்சரியம் ஆச்சரியம் எவ்ளோ mechanism எங்க problem வந்தா எப்படி கண்டுபிடிக்க முடியும் அய்யோ அப்பா ஒண்ணும் புரியல.அங்கே இருந்து வெளியே opposite ல aircraft museum யப்பா தலயே சுத்திடுச்சு 🥴

      கப்பல் தரை தட்டிய tennety park beach அங்க ஒரு பொண்ணு எங்க கூட பேச ஆசைப்படுது எங்க கூட நின்னு போட்டோ எடுத்து அதோட status ல beautiful souls னு வெக்குது.மனசுல இனம் புரியாத சந்தோசம். அங்கே இருந்து அரக்கு பள்ளத்தாக்கு vistadome train ல ஆஹா ஓஹோ ஏஹே ஹோய்.தங்குன இடத்தில் கொஞ்சமா மலை முகடு அங்கே உக்காந்தேன் சூரியன் என்ன பாத்துட்டு போகவே இல்லை மெது மெதுவா மறையறதுக்கே இஷ்டம் இல்லாமல் காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்னு😁.கீழ railway track நாங்க வந்த train return பாத்து ஓன்னு சத்தம் போட்டு கையசைச்சு இது ஒரு பொன்மாலைப்பொழுது 😍

                   அங்கேருந்து Borra caves போனோம் உள்ளே போக முடியுமானு தோணுச்சு போற வரைக்கும் போலாம் னு போனேன் குகைகளின் பிரமாண்டம் ஆனா artificial lighting நல்லா தான் இருக்கு இருந்தாலும் இயற்கை இயற்கை தானே.

          அடுத்த நாள் மதியம் காக்கிநாடா போக இவருக்கு தெரிஞ்சவர் ஊர்ல இல்லை ஆனா அவர் நண்பர அனுப்பி அப்பாவோட college க்கு ஆட்டோல போனோம்.எல்லாமே மாறிடுச்சு எனக்கு மட்டும் இல்ல அவருக்கும் சந்தோஷம் அதிகமாக இருந்தது.அங்க இருந்தவங்க கிட்ட சொல்ல அவங்களும் எங்கள ஆச்சரியமா பாத்தாங்க.இது நான் நினைச்சே பாக்காத ஒன்று.

             அந்த ஊரில நிறைய நடந்தோம் ஏதோ என் சொந்த ஊரைப்போல அப்பா அந்த காலத்தில் எப்படி வந்து இருப்பார் படிப்பின் மேல் வெறி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்னு பேசி பேசி . அடுத்த நாள் காலை சூரிய உதயம் பாக்க கடல் கிட்ட போயிட்டு shopping போனோம் எப்பவும்  tour போனா எதுவுமே வாங்க மாட்டேன் இந்த முறை உப்பாடா பட்டு புடவை ரெண்டு வாங்குனேன்.அப்பாவோட ஆசீர்வாதம்.அப்புறம் என்ன மதிய train புடிச்சு சென்னை வந்தோம்.

       Train ல ஒரு குட்டி தேவதை என் கிட்ட ஒட்டிக்கிட்டு என்ன டக்காளி aunty னு கூப்பிட்டு கூப்பிட்டு சிரிச்சது டான்ஸ் பாட்டுனு என்ன கேட்டாலும் செஞ்சது.சென்னைக்கு அடுத்த நாள் நல்லவிதமா வந்து சேர்ந்தோம் இது ஒரு நெகிழ்வான பயணம் என் அப்பா மேல என் வீட்டுக்காரர் வைத்து இருந்த மரியாதை காரணமாக தான் இந்த பயணம் நடந்தது எனக்கும் என் கணவர் மேல மரியாதை கூடிச்சு.வயதாக வயதாக இந்த மாதிரி விஷயங்கள் நடந்தா சந்தோஷம்.🙂

Comments

  1. நல்ல அனுபவம்.. வாழ்க வளமுடன்.. சிறப்பான எழுத்துரை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை