குட்டி பொண்ணு
ஞாயிற்றுக்கிழமை காலைல ஒரு பதினோரு மணிக்கு துணிக்கடை இல்லை கடல் பேர் சொல்லலாம் னு நினைக்கிறேன் என்னாகப்போகுது.சென்னை சில்க்ஸ் தான்.கோயமுத்தூர்ல எப்பவும் Sridevi textiles இங்கே வேளச்சேரி அருகில் இந்த கடைதான் எனக்கு Tnagar லாம் போகப் பிடிக்காது கூட்டம் கூட்டமாக மக்கள். பெரிய shopping லாம் இல்லை சும்மா ஷால் ரெண்டு வாங்க போனோம்.ஒரு சின்ன பொண்ணு தான் அங்க இருந்தா எடுத்து காமிக்க கஷ்டப்பட்டா ஏன்மா உடம்பு சரியில்லையானு கேட்டேன் இல்லை பசிக்குதுன்னு சொல்ல ஏன் காலைல சாப்பிடலயானு கேக்க இல்லை அப்ப பசிக்கல இப்போ பசிக்குதுன்னு சொன்னா கஷ்டமா இருந்தது. Break இருக்கும் ல அப்போ போய் சாப்பிட்டு வான்னு சொன்னதுக்கு நான் part time எனக்கு break லாம் இல்லை னா .எங்க வீட்டுக்காரர் சம்பளம் எவ்வளவு னு கேக்க ஏழாயிரம் ரூபாய் full time இருந்தா பன்னண்டாயிரம் நான் Bcom படிச்சிட்டு இருக்கேன் ஆச்சரியமாக இருந்தது நீ plus two படிக்கறேன்னு நினைச்சேன் னு சொல்ல final exam எழுதிட்டேன்னு சிரிச்சா அப்புறம் shawl எடுத்ததுக்கு sticker ஒட்ட ஆரம்பிக்க உனக்கு incentive...