சீனிவாசன்

       தலைப்பு ஒருவரோட பேரு ஆமாங்க நேத்து ராத்திரி நாங்க வந்த சேரன் எக்ஸ்பிரஸ் சாரதி  .

        இப்போ எல்லாம் ரயில் பயணம் அதிகமா போயிட்டு இருக்கேன்.இரவு பயணம் எனக்கு அவ்வளவு பிடிக்காது ஏன்னா தூக்கம் வராது.உக்காரவும் முடியாது அதுல ஒவ்வொரு station ல நிக்கும் போது கிளம்பும் போது எல்லாம் ரொம்ப jerk ஆகிறது.இது ஏன் னு Google பண்ணி பார்த்தா ஏதோ joint methods னால அப்டி னு இருந்தது.

         நேத்து பதினோரு மணி கோயம்புத்தூர் ல ஏறி middle berth உடனே படுத்தாச்சு.  ஆரம்பம் செம வளைவு செம speed ஆஹா மாட்டிட்டோம் இன்னைக்கு தூங்கன மாதிரி தான் னு நினைச்சுட்டு அப்படியே தூங்கிட்டேன் அவ்ளோ tired. கொஞ்ச நேரத்தில் முழிப்பு வந்து பார்த்தா train எங்கயோ நின்னுட்டு இருந்தது போல திரும்ப பார்த்தா அதே feel சரி எங்கதான் நிக்குதுன்னு திரைய விலக்கிப் பார்த்தா ரயில் போயிட்டு இருக்கு எனக்கா ஆச்சரியம் ஏதாவது தண்டவாளத்தில் வெண்ணெய் வெச்சுட்டாங்களோ .

            நான் எப்போ train la rest room போனாலும் அப்பதான் speed pickup ஆகும் ரொம்ப தட்டு தடுமாறி balance பண்ணுவேன்.இங்க ஒண்ணும் கஷ்டமாவே இல்லை . அப்புறம் வந்து படுத்தா தாலாட்டுப்போல மிக மிக மெதுவாக ஆட்டம் . அதுக்கு அப்புறம் என்ன நல்லா தூங்கி பெரம்பூர் ல தான் எந்திருச்சு freshup ஆயிட்டு சீக்கிரமே Central ம் வந்து இறங்கினோம்.

         இன்றைக்கு நல்லா தூங்கினேன்.jerk ஏ இல்லைங்க.ரொம்ப நல்லா ஓட்டுனாரு . screw type joint லாம் ப்ரச்னை இல்லை.எல்லாம் driver  பொறுப்பு தான்  போல.அவர பார்த்து thanks சொல்லணும் னு சொல்ல எங்க வீட்டுக்காரர் அதெப்படி நான் நினைச்சது நீ சொல்ற னுட்டு கொஞ்சம் வேகமாக நடந்தோம் அப்போ என்ஜின் கதவு திறந்து அவர் இறங்கினார் ரெண்டு bag  கோடு வேகமாக கிளம்பிட்டார். 

           என் husband அங்கே இருந்த attender கிட்ட அவர் பேர் கேட்டு appreciate பண்ணி அவர் கிட்ட சொல்லிட சொல்லிட்டு வந்தார்.எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் கடமையை நல்லவிதமாக செய்யற மனுஷங்க தான் கடவுள் தனியா எங்கேயும் தேட வேண்டியதில்லை . சென்னை ல மழையும் பெய்து எங்கள வரவேற்பு குடுத்தது இன்னும் சிறப்பு.

           

Comments

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை