குட்டி பொண்ணு

   ஞாயிற்றுக்கிழமை காலைல ஒரு பதினோரு மணிக்கு துணிக்கடை  இல்லை கடல் பேர் சொல்லலாம் னு நினைக்கிறேன் என்னாகப்போகுது.சென்னை சில்க்ஸ் தான்.கோயமுத்தூர்ல எப்பவும் Sridevi textiles இங்கே வேளச்சேரி அருகில் இந்த கடைதான் எனக்கு Tnagar லாம் போகப் பிடிக்காது கூட்டம் கூட்டமாக மக்கள்.

        பெரிய shopping லாம் இல்லை சும்மா ஷால் ரெண்டு வாங்க போனோம்.ஒரு சின்ன பொண்ணு தான் அங்க இருந்தா எடுத்து காமிக்க கஷ்டப்பட்டா ஏன்மா உடம்பு சரியில்லையானு கேட்டேன் இல்லை பசிக்குதுன்னு சொல்ல ஏன் காலைல சாப்பிடலயானு கேக்க இல்லை அப்ப பசிக்கல இப்போ பசிக்குதுன்னு சொன்னா கஷ்டமா இருந்தது.

    Break இருக்கும் ல அப்போ போய் சாப்பிட்டு வான்னு சொன்னதுக்கு நான் part time எனக்கு break லாம் இல்லை னா ‌.எங்க வீட்டுக்காரர் சம்பளம் எவ்வளவு னு கேக்க ஏழாயிரம் ரூபாய் full time இருந்தா பன்னண்டாயிரம் நான் Bcom படிச்சிட்டு இருக்கேன் ஆச்சரியமாக இருந்தது நீ plus two படிக்கறேன்னு நினைச்சேன் னு சொல்ல final exam எழுதிட்டேன்னு சிரிச்சா அப்புறம் shawl எடுத்ததுக்கு sticker ஒட்ட ஆரம்பிக்க உனக்கு incentive உண்டா என் கணவரோட கேள்வி ஆ உண்டு ணா மாசத்துக்கு ரெண்டு லட்சம் sales காமிச்சா ஆயிரம் ரூபாய் போன மாசம் வாங்கினேன் னு அந்த முகத்தில அவ்ளோ சாதிச்ச சந்தோஷம் இந்த மாசம் கஷ்டம்தான் நிறைய லீவ் எடுத்திட்டேன் அம்மா கூட கோயில் அப்புறம் exam னு ‌.எங்களுக்கு என்ன சொல்றதின்னே தெரியல நிஜமாவே.

          பக்ரீத் வருது சரி ஒரு சுடிதார் மெட்டீரியல் எடுத்துக்கறேன்னு பார்க்க அந்த அழகு பெண் நிறைய எடுத்து காமிச்சது. எனக்கு எப்பவும் நிறைய பாக்குற பழக்கம் இல்லை அதனால் இரண்டாவது காண்பித்ததை எடுத்து விட்டு வெளியே வந்தேன்.வீட்டுல இன்னொன்றும் எடுத்து இருக்கலாம் ல என்றார்.

         நமக்கு ஆயிரம் ரூபாய் அவ்ளோ பெருசு இல்லை ஆனால் நிறைய பேருக்கு அதன் மதிப்பு மிகவும் பெரியது.மனசு கனத்துதான் போகிறது. எப்படியும் வாழலாம் னு நினைக்கறவங்க வளமான வாழ்க்கை வாழறாங்க இப்படித்தான் வாழணும் னு வாழறவங்க கஷ்டப்பட்டு உழைக்கறாங்க.எல்லோரும் நல்லா இருக்கணும் னு எப்பவும் போல மனசு வேண்டுது. 

Comments

  1. U hv written in ur own style. U hv brought back real happenings to my memories. , really Wonderful highly appreciated. Keep up ,Ur hidden skills/ talent they way R. , Congratulations

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை