Posts

கார்த்திகை தீபம்

     கார்த்திகை தீபம் னாலே அழகு.முன்னே எல்லாம் நாங்க வண்டில ஒரு ரவுண்டு போவோம் வீடுகள் ல விளக்கு எரியற அழக பாக்கவே.        Housing unit ல இருக்கும் போது என் பையன் எதுத்த வீட்டு பொண்ண அக்கா எங்க வீட்டுக்கு வாங்க னு இழுத்துட்டு வந்து பால்கனில விளக்கு வைக்க சொல்லி அவங்க வைக்கலாமா னு  கேட்டு பால்கனி முழுசும் விளக்கு எரிய விட்டது இன்னும் மறக்க முடியல.        ஒரு வருஷம் அந்த அக்கா எனக்கு phone பண்ணி நாங்க வர்றதுக்கு time ஆகும் போல வீட்டுல அவர் விளக்கு தருவாரு எண்ணெய் ஊத்தி விளக்கு பத்த வெச்சிடுறீங்களா னு கேட்டு நான் ரொம்ப ரசிச்சு அவங்க வீட்டில் விளக்கு வெச்சதும் மலரும் நினைவுகள்.      ஏனோ இப்போ ரொம்ப அந்நியப் பட்டு விட்டோமோ னு தோணுது .

ஆச்சரியம் ஆனால் உண்மை

        நேத்து சத்தியமங்கலம் பக்கத்துல அத்தாணி வரை போக வேண்டி இருந்தது.சத்தியை கடக்கும் போது கல்லறை தோட்டம் இங்கே தான அப்பாவும் அம்மாவும் னு நினைச்சு போயிட்டு இருக்கும்போது என்கூட படிச்ச பழனிச்சாமி வீடு கிரகப்பிரவேசத்துக்கு போனது.நீ வருவேன்னு நான் எதிர்பாக்கல னு சொன்னது எங்க கூடவே இருந்து சாப்பிட்டது கடைசி வரை என்ன சொல்லியும் கவர் வாங்காதது.அப்படியே பழைய ஞாபகங்கள்.          திரும்பி சத்தி வழியா வரும் போது அம்மா இருந்து இருந்தா சாப்பாடு ரெடியா வெச்சு பரிமாறி இருப்பாங்க னும் ஏதோ வெளியார் போல அந்த இடத்தை கடந்ததும் மனசுக்கு ரொம்ப பாரமா இருந்தது.அவரோட நண்பர் சத்தில வேண்டாம் சிறுமுகை ல ரமேஷ் மெஸ் நல்லா இருக்கும் னு கூட்டிட்டு போனார்.நண்பர் ரமேஷின் பிறந்த நாள் அன்னைக்கு ரமேஷ் மெஸ் ல சாப்பிடறோம்னு சிரிச்சிட்டே உள்ள போனோம்.          நல்ல பசி சாப்பாடு வெச்ச பெண் கழுத்தில் கருகமணி ஆனா சரளமா கன்னடம் பேசிட்டுஇருந்தாங்க.மறுமடியும் அம்மா ஞாபகம்.அம்மா நல்லா கன்னடம் பேசுவாங்க.எண்ற ஊட்டுக்காரர் அந்த அம்மாவப்பார்த்து நீங்க முஸ்லிமா னு க...

ஈத் முபாரக்

     ரம்ஜான் ஈத் முபாரக் . முக்கிய பண்டிகை னா ரம்ஜானும் பக்ரீத்தும்.ரம்ஜானுக்கு கண்டிப்பா புதுத்துணி உண்டு பக்ரீத் பற்றி ஞாபகம் இல்லை.       ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது பெரிய கர்வம் பள்ளிப்பருவத்தில்.நான் சரியாக சாப்பிட மாட்டேன் னு எங்க அம்மா சஹருக்கு எழுப்பாம விட்டுடு வாங்க.அழுவேன்.கொஞ்சம் பெரியவளானதும் நோன்பு வெக்கலன்னா புதுத்துணி வாங்க கூடாது னு வைராக்கியமா இருந்திருக்கிறேன்.         காலேஜ் படிக்கும் போது எனக்கு முடியாது.அப்போவே ரம்ஜான் அன்னைக்கு practical exam பண்ணியிருக்கேன்.அப்புறம் சத்தியமங்கலத்தில் மிக ஆழமான நோன்பு நாட்கள்.பக்கத்து வீடுகளில் பண்டமாற்று முறை.பாட்டி அம்மா நான் மூன்று பேரும் இருப்போம்.அப்பாவால் முடியாது ஆனால் அவரால் முடிந்த அளவுக்கு வாழைப்பழம் பேரிச்சை சாக்லேட் எல்லாம் வாங்கி பள்ளிவாசல் இஃப்தாருக்கு போய் நோன்பாளிகளுக்கு குடுத்து தானும் நோன்பு துறந்தார்.           தராவீஹ் தொழுகை அப்பா விட்டதே இல்லை.எங்கள் வீட்டில்  புதுசா fridge வாங்கி இருந்தோம்.எல்லோரும் தண்ணீர் எலுமிச்சை ஜூஸை கொண்...

அலைமகள்

Image
நில் என்றேன்  அப்படியே நின்றது ஆனால்  பாவமாக  பார்த்தது சரிசரி மெதுவா என்றேன்  மகிழ்ச்சியில்  பொங்கி தழுவியது. 🥰

வார்த்தைகள்

      இந்த தலைப்பு எடுத்து கிட்ட தட்ட ஒரு மாசம் இருக்கும்.ஏனோ எழுத வார்த்தைகள் கோர்வையா வரல.ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்.எத்தனை உண்மை ‌        ரோட்ல நடக்கவே பயப்படற பொண்ணு நான் அந்த அளவுக்கு அப்பா தோள்லயே வளர்ந்தேன்.college சேர்ந்த பின்ன அப்பா சொன்ன வார்த்தை நீ சூரியன் மா நாய்கள் குலைக்கத்தான் செய்யும் போயிட்டே இருக்கணும் னு.               எந்த அளவுக்கு positive வார்த்தை என்னை encourage பண்ணுதோ அதே அளவு negative வார்த்தை என்னை உடைஞ்சு போகவும் வைக்கும் அப்போ எல்லாம் எனக்கு நானே பாடிக்கற பாட்டு சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன் கை விடுவாரோ சோர்ந்து போகாதே.             வார்த்தைகளின் பலம் மிகமிக அதிகம் ‌.என் கடின காலத்தில் என் மகன் சொன்ன வார்த்தைகள் அம்பது வருஷம் வாழ்ந்திருக்க ஏழு மாசம் பொறுத்துக்க மாட்டியா. அழறியாமா சரி அழுது முடிச்சு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போய் வேற வேல...

2024

      ஜனவரில ஆரம்பிச்சது  டிசம்பர் வரை எண்ணற்ற பயணங்கள் இந்த வருஷத்துல.சென்னைக்கு transfer ஆகி வந்ததுலேருந்து போதும் போதும்கிற அளவு ரயில் பயணங்கள்.ஒவ்வோரு தடவையும் புது புது அனுபவம்.         காடுகள் மலைகள் அருவிகள் கடற்கரை னு நிஜமாகவே இயற்கை என்னை கூப்பிட்டு கூப்பிட்டு சந்தோஷப்படுத்திய வருடம் இது.   எங்காவது போறதுக்கு முன்னாடி நிறைய தடவை உடம்பு சரியில்லாம போச்சு என்பதும் இந்த ஐந்து வருஷத்தில் இவ்வளோ படுத்தது இல்லைங்கறதும் உண்மை.          ஆனா அதையும் மீறி இந்த நாட்கள் மீண்டும் கிடைக்குமோ கிடைக்காதோ னு சுத்தியிருக்கேன். இதுல காக்கிநாடா போனது அந்த ஊரில் நடக்கும் போது எல்லாம் அப்பா இங்கே எல்லாம் நடந்து இருப்பார்ல னு தோணிட்டே இருந்தது. படிப்பு மேல் எவ்வளவு ஆர்வம் இருந்து இருந்தா அந்த காலத்தில் இங்கே வந்து இருப்பார்னு ஆச்சரியமாக இருந்தது.          இப்போ திடீர்னு குற்றாலம் போக முடிஞ்சது.இது வரை நான் போனதே‌ இல்லை.போன போது ஒரே வெள்ளம் உள்ளே அனுமதிக்கல.ஆனா ஐந்தருவில இவர் கேட்டு நாங்க ரெண்டு பேர் மட...

கடற்கரை

     போன வருஷம் டிசம்பர் ல பெசன்ட் நகர் பீச் க்கு ரொம்ப ஆசையா போனேன் . நுழையும் போதே நிறைய கடைகள் அப்புறம் கடற்கரை ல போய் உக்காரலாம்னா நிறைய நாய் காக்கா தலைக்கு பக்கமா பறந்து பறந்து போச்சு.கூட்டமும் ஜாஸ்தி . கொஞ்ச நேரம் தான் உக்காந்தேன் .போய் பஜ்ஜி கடைல அம்பது ரூபாய்க்கு அஞ்சு சாப்பிட்டு கிளம்பிட்டோம்.                 இந்த வாரம் போலாம் னு வீட்டு ல சொன்னப்போ பழசு அப்படியே rewind ஆச்சு.ஆனாலும் வீட்டுக்குள்ளயே இருக்கோமே போலாம் னு கிளம்பினேன்.Beach உள்ளே நுழையும் போதே நம்மாளுக்கு டீ ஞாபகம் வர அங்கே இருந்த turkey tea shopல உக்கார்ந்து டீ சக்கரை இல்லாமனு கேக்க சார் காஃபி வேணா சக்கரை இல்லாமல் கிடைக்கும் னு அந்த கடைக்கார பொண்ணு சொல்ல சரினு wait பண்றோம் பண்றோம் பண்ணிட்டே இருந்தோம்.  பொறுமையிழந்து கேக்க சார் மணல்ல வெச்சு சூடு பண்ணி தருவோம் அதான் இப்போ ரெடியாயிடும்னு மறுபடியும் ரொம்ப நேரம் கழிச்சு கொண்டு வந்து குடுத்தது.அதுல சக்கரை சேர்த்து தான் இருந்தது.              ஒரு வழியாக கடற்கரை நோக்கி நகர்ந்தோம்.ஆ...