2024

      ஜனவரில ஆரம்பிச்சது  டிசம்பர் வரை எண்ணற்ற பயணங்கள் இந்த வருஷத்துல.சென்னைக்கு transfer ஆகி வந்ததுலேருந்து போதும் போதும்கிற அளவு ரயில் பயணங்கள்.ஒவ்வோரு தடவையும் புது புது அனுபவம்.
        காடுகள் மலைகள் அருவிகள் கடற்கரை னு நிஜமாகவே இயற்கை என்னை கூப்பிட்டு கூப்பிட்டு சந்தோஷப்படுத்திய வருடம் இது.   எங்காவது போறதுக்கு முன்னாடி நிறைய தடவை உடம்பு சரியில்லாம போச்சு என்பதும் இந்த ஐந்து வருஷத்தில் இவ்வளோ படுத்தது இல்லைங்கறதும் உண்மை.
         ஆனா அதையும் மீறி இந்த நாட்கள் மீண்டும் கிடைக்குமோ கிடைக்காதோ னு சுத்தியிருக்கேன்.
இதுல காக்கிநாடா போனது அந்த ஊரில் நடக்கும் போது எல்லாம் அப்பா இங்கே எல்லாம் நடந்து இருப்பார்ல னு தோணிட்டே இருந்தது.
படிப்பு மேல் எவ்வளவு ஆர்வம் இருந்து இருந்தா அந்த காலத்தில் இங்கே வந்து இருப்பார்னு ஆச்சரியமாக இருந்தது.
         இப்போ திடீர்னு குற்றாலம் போக முடிஞ்சது.இது வரை நான் போனதே‌ இல்லை.போன போது ஒரே வெள்ளம் உள்ளே அனுமதிக்கல.ஆனா ஐந்தருவில இவர் கேட்டு நாங்க ரெண்டு பேர் மட்டுமே.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரீ னு பரவசமாயிட்டேன்.
         இனிமே ஒரு ஊரில் குறைந்த பட்சம் பதினைந்து நாட்களாவது நம்மை பற்றி தெரியாத மக்களின் நடுவில் தங்கி வரணும்னு ஆசை.
புது மனுஷர்கள்னா நமக்கு எதிர்பார்ப்புகள் இல்லை ஏமாற்றங்களும் இல்லை.கொஞ்ச நாள் பழகிட்டா எதிர்பார்க்க ஆரப்பிச்சிடறோம்.அதனால பயணங்கள் போயிட்டே இருக்கணும் புதுப்புது அனுபவங்களோட.
       

Comments

  1. அருமை. வாழ்க்கையில் பயணங்கள் முடிவதில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

முடி திருத்தம்

இடமா படமா