ஆச்சரியம் ஆனால் உண்மை
நேத்து சத்தியமங்கலம் பக்கத்துல அத்தாணி வரை போக வேண்டி இருந்தது.சத்தியை கடக்கும் போது கல்லறை தோட்டம் இங்கே தான அப்பாவும் அம்மாவும் னு நினைச்சு போயிட்டு இருக்கும்போது என்கூட படிச்ச பழனிச்சாமி வீடு கிரகப்பிரவேசத்துக்கு போனது.நீ வருவேன்னு நான் எதிர்பாக்கல னு சொன்னது எங்க கூடவே இருந்து சாப்பிட்டது கடைசி வரை என்ன சொல்லியும் கவர் வாங்காதது.அப்படியே பழைய ஞாபகங்கள்.
திரும்பி சத்தி வழியா வரும் போது அம்மா இருந்து இருந்தா சாப்பாடு ரெடியா வெச்சு பரிமாறி இருப்பாங்க னும் ஏதோ வெளியார் போல அந்த இடத்தை கடந்ததும் மனசுக்கு ரொம்ப பாரமா இருந்தது.அவரோட நண்பர் சத்தில வேண்டாம் சிறுமுகை ல ரமேஷ் மெஸ் நல்லா இருக்கும் னு கூட்டிட்டு போனார்.நண்பர் ரமேஷின் பிறந்த நாள் அன்னைக்கு ரமேஷ் மெஸ் ல சாப்பிடறோம்னு சிரிச்சிட்டே உள்ள போனோம்.
நல்ல பசி சாப்பாடு வெச்ச பெண் கழுத்தில் கருகமணி ஆனா சரளமா கன்னடம் பேசிட்டுஇருந்தாங்க.மறுமடியும் அம்மா ஞாபகம்.அம்மா நல்லா கன்னடம் பேசுவாங்க.எண்ற ஊட்டுக்காரர் அந்த அம்மாவப்பார்த்து நீங்க முஸ்லிமா னு கேக்க ஆமாம் னு சொல்லுச்சு அந்த அம்மா.எப்பவும் போல இல்லாமல் உங்க பேர் என்ன னு கேட்டார் அந்த அம்மா ரஜியா னு சொன்னவுடன் எனக்கு அவ்ளோ ஆச்சரியம்.எங்க அம்மா பேரும் ரஜியா பேகம்.அம்மா கையால் சாப்பிட்டது போலவே ஒரு பொருத்தம்.ஏதோ ஒரு சக்தி நம்மை பார்த்து கொண்டும் கேட்டுக்கொண்டும் தான் இருக்கு.
👍🙏
ReplyDelete