அவமானங்கள் வரம்

ஒவ்வொரு மனுஷனும் வாழ்க்கை ல அவமானம் ங்கறஅரிவாள் வெட்டு வாங்காம இருக்க மாட்டார்கள்.பின்னால யோசிச்சு பார்த்தா நம்மையறியாமல் நம்ம கிட்ட மாற்றம் ஏற்பட்டிருக்கும் அது அந்த அவமானத்தினால் வந்த நல்வினை.எட்டாவது
 படிக்கும் போது நடந்த நிகழ்வு கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்பு இன்னும் கண்ணை மூடினால் அப்படியே படம் ஓடும்.நான் நல்லா படிப்பேன்.ஆனா கையெழுத்து பார்க்க சகிக்காது.அப்பல்லாம் கையெழுத்து திருத்தறதுக்கு class  எல்லாம் கிடையாது.அதனால கையெழுத்து பத்தி எண்றத விட்டுட்டேன்.விஜயா மிஸ் கணக்கு டீச்சர் நான் என்ன நல்லா கணக்கு போட்டாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்காது.நானும் என்ன செஞ்சாலும் அவங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கும் னு என்ன இருக்கு.சரி விஷயத்துக்கு வருவோம்.ஒரு நாள் முதல் நாலு ரேங்க் எடுக்கற நாலு பொண்ணுங்க ள கூப்பிட்டு கணக்கு நோட்டு ஒரு மாசத்துக்கு யாரு அழகா வெச்சிருக்கீங்களோ அவங்களுக்கு பரிசு குடுப்பேன்னு சொன்னாங்க.நானும் முடிஞ்ச அளவுக்கு கையெழுத்து திருத்தி சுத்தமா வெச்சிருந்தேன்.ஒரு மாசம் கழிச்சு எல்லார் நோட்டையும் வாங்குனாங்க. ரெண்டு மூணு நாள் கழிச்சு எல்லோரையும் கூப்பிட்டு நோட்டோட பென்சில் ரப்பர் அப்பல்லாம் ரப்பர் தானே சொல்லுவோம் குடுத்தாங்க.எனக்கு மட்டும் நோட் நான் அவங்களை பாக்குறேன்.என்ன பாக்குற போனு வெறுப்பா சொன்னாங்க . சின்ன பொண்ணு தானே ஒண்ணு கூப்பிடாமயாவது இருந்திருக்கணும் இல்லை பென்சிலாவது குடுத்திருக்கணும்.அப்படியே கண்ணீர் வழிய தலைய குனிஞ்சு வந்துட்டேன்.இப்பகூட கண்ணீர் வழியுது.இதுக்கப்புறம் எத்தனை முறை அவமானப்பட்டாச்சு.ஆனாலும் இத மறக்க முடியல.இதுல துணப்பாடம் காந்திஜியின் சத்தியசோதனையில் சொல்லி யிருப்பார்.என்னுடைய தீய  பழக்கத்தை கூட விட்டுட்டேன்.மாத்திக்க முடிஞ்சது.ஆனா என் கையெழுத்த மாத்த முடியலன்னு.அதனால நானும் அப்படியே மறந்துட்டேன்.
பதினோராம் வகுப்புல என் பக்கத்தில் நர்மதா N போடுறதே style ஆ இருக்கும். என்னையறியாமல் என் கையைழுத்து மாறியது.அப்பகூட எனக்கு புரியல.அப்புறம் காலேஜில் அப்படியே மாறிடுச்சு.வேலைக்கு சேர்ந்தாச்சு பாலிடெக்னிக்கில் instructor ஆ சேர்ந்தேன்.exam valuation duty. Papers எல்லாம் திருத்தி மறுபடி அனுப்பணும். H.O.D சொல்லிட்டு இருக்கார்.பேகம் கிட்ட குடுங்க அவங்க எழுத்துதான் தெளிவா அழகா இருக்கும்  என் காதுகள் இந்த வார்த்தை ய கேக்க பத்து வருஷமா காத்துட்டு இருந்தது.அவ்வளவு சந்தோஷம்.இப்பக்கூட என் கண்ணில் நீர் ஆனால் இது ஆனந்தக்கண்ணீர்.அவமானம் நம்மையறியாம அப்படியே உள்ள பதிஞ்சிடுது.அது அப்படியே நம்மள மாத்திடுது இப்ப சொல்லுங்க அவமானங்கள் வரம் தானே

Comments

  1. இது உண்மையில் நிஜம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது இதை நினைவில் வைத்திருப்பது மாற்றத்தை உண்டாக்கியது அருமை மிக அருமை

    ReplyDelete
  2. அவமானங்களை வரமாக மாற்றி கொள்வது ஒரு சங்கல்பம்.

    ReplyDelete
    Replies
    1. மனதில் ஆழமாக பதியும் அவமானங்கள் நம்மையறியாமல் நம்மை மாற்றிவிடுகிறது.நன்றி

      Delete
  3. அருமை..
    வரமா சாபமா..எடுத்துக்கொள்பவரின் மனநிலையை பொறுத்தது.

    ReplyDelete
  4. ஆர்ப்பாட்டமான எழுத்தோ அலங்காரமான வார்த்தைகளோ இன்றி உணர்வு பூர்வமாக இதயத்திலிருந்து எழுதப்பட்ட எளிமையான வரிகளுடன் மிக இயல்பாக ஒன்றி விட முடிகிறது நஸ்😍🤩 carry on ur good work👍

    ReplyDelete
  5. நன்றி சங்கீதா வழக்குமொழில எழுத try பண்றேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை