ஈகைத் திருநாள்

ரம்ஜான்  நோன்பு வைப்பதற்கும் பிறருக்கு ஈந்துவுப்பதிலும் சந்தோஷம் தரும் மாதம்.யாருக்கெல்லாம் ஸகாத் குடுக்கலாம் பா அப்பாவிடம் நான் சிறுவயதில் கேட்ட கேள்வி.those who are poor and needy அப்பாவின் பதில். சின்ன வயசுல பதிஞ்சது.கையில் இருக்கும் பத்து பைசாவையும் குடுக்க மனம் மாறியதும் பிறர் துன்பத்தை தன் துன்பமாக நினைக்க வைத்ததும் அந்த வயதில் தான்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் சந்தோஷம் தரும் எனக்கு ஈகையை விட வேறு இல்லை என்றே சொல்லலாம். எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் குடுப்பதில் என் கணவருக்கும் எனக்கும் ஒற்றுமை அதிகம்.இந்த வருடம் ரம்ஜான் கு முன்னரே கொரோனாக்காக குடுக்க ஆரம்பித்து விட்டோம்.என் வாழ்வை நீட்டித்ததன் அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது.எந்த வருடமும் இல்லாத அளவிற்கு பிறருக்கு குடுக்க உதவிய ஆண்டவனுக்கு நன்றி . இந்த உலகத்தில் நம்மை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று அவருக்கு தெரியாமலா இருக்கும்.

Comments

  1. ரமலானில் ஸகாத் எனும் ஈகை பண்பின் வெளிப்பாடு ,உங்கள் அனுபவம் வாயிலாக ..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை