போராளி

   நம்ம நாட்டு எல்லைல போராடற வீரனப்பத்தி சொல்லப்போறேன்னு பாக்கறீங்களா இல்லீங்க தன்னை நிரூபிக்கப்போராடும் பெண்களப்பத்திதாங்க சொல்லப் போறேன் ‌.
    என்னதான் பெண்ணீயம் பேசினாலும்  இந்த உலகம் கண்டிப்பா ஆண்சார்புநிலை உலகமாகத்தான் இருக்கு.நாம சாதிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கு.நானும் போராட்டக்குணம் கொண்டவதான். படிக்கறதிலயும் வேலையிலயும் புகுந்த வீட்டிலயும்  போராடித்தான் ஜெயிச்சிருக்கேன்.இதவிட காலம் தர்ற வேதனையை சாதனையா மாத்தறதுக்கு பாடுபடற ஒரு பொண்ணை சந்திச்சேன்.
  என் தோழியோட தோழி அவர்.அவரப்பத்திதான் இங்கே சொல்லப்போறேன்.
விவசாயக்குடும்பம் தான்.
 ஆனால் விவசாயம் செய்யறதில்ல ரெண்டு குழந்தைகள் மாமனார் மாமியார் ம் ஆமாம் கணவர் இல்ல விபத்துல இறந்துவிட்டார்.நாங்க அவங்க  வீட்டுக்கு போனப்போ அவங்க வீட்டில் இல்லை.தேங்காய் நார் உரிக்கும் ஆலையில் இருந்து வேர்க்க விறுவிறுக்க வந்தாங்க.அவரைப்பார்த்ததும் தெரிஞ்சது நல்ல தைரியமான பொண்ணு னு.இல்லனா வேல வாங்க முடியாது எட்டு மணிக்கு போனா நைட்டு எட்டு மணிக்கு தான் வருவேங்க எல்லாம் automatic தான் ஆனால் நாம் நிக்கலேன்னா வேலை நடக்காது என்று சொல்லிட்டே கேரட் ஜுஸ் போட்டு குடுத்தாங்க.நாகரீகம் கருதி அவங்க கணவர் பத்தி பேசாம ஏதேதோ பேசிட்டு இருந்தோம்.நடுநடுல என் தோழியின் கணவர் பத்தி பேசி கிண்டல் பண்ணி கொண்டு இருந்தோம்.
   Ladies enterpreneur ஆறது அவ்ளோ easy இல்லீங்க என்னையெல்லாம் ஒரு...................... மாதிரிதான் பார்த்தாங்க சொல்லும்போதே கண்கள் கலங்க உதடுகள் நடுங்க அவர் தன்னை நிரூபிக்கப்போராடியதை சொல்லும்போதே அவ்வளவு வலி.இவ  மட்டும் இல்லைனா நான் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டேன் என்று தோழியை கை காட்டினார்.தோழியும் தோழியின் கணவரும் தனக்கு support ஆக இருந்ததையும்சொன்னாங்க.
       பேச்சிலிருந்து அவங்க
 மனநிலையும் ஊரார் தந்த வலிகளையும் என்னால உணர முடிஞ்சது.போர்க்களம் கூட உடல்வலியைக்குடுக்கும் ஆனால் ஒரு பெண்ணிற்கு மனதளவில் உடைய வைக்க அவளப்பத்தி தெரியாதா இந்த வார்த்தை போதுமே.ஒரு படித்த பெண் அவருக்கே இந்த நிலைமையென்றால் படிக்காத பெண்களின் நிலை. அதென்னமோ தெரியலீங்க பொண்ணுங்க ன்னா இன்னும் கண்ணோட்டம் மாறல எல்லாமே ஒரு கண்துடைப்பாத்தான் இருக்கு.இப்ப சொல்லுங்க தன்ன நிலைநிறுத்திக் கொள்ள போராடற ஒவ்வொரு பொண்ணும் போராளி தானே

Comments

  1. சமுக பார்வையில் முற்றிலும் உண்மை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சமூகம் சார்ந்த வேதனை 😡

      Delete
  2. சில நேரங்களில் போராட்டம் பிடித்துவிடும்.. பிடித்த பிறகு வென்று காண்பிப்பர்.. உங்கள் தோழியின் தோழியும் வென்று காண்பிப்பார். வாழ்த்துக்கள்.. Good write up.. 🙏🥰

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் போராட்டமே வாழ்க்கை ஆகிவிடுகிறது.🙏

      Delete
  3. சூழ்நிலை ,தேவை,ஆர்வம், பொழுதுபோக்கு என பல காரணங்களால் கடின உழைப்பு மற்றும் திறமையினால் வாழ்வில் வெற்றி பெற்ற பெண்டீர் பலர் நம் கண் முன்னே. இவர்கள் மட்டுமல்ல பெரும்பான்மை குடும்பங்களை தங்கள் அரவணைப்புஅக்கறை பாசம் யோசனை பரிந்துரை மூலம் வெற்றி பெற வைக்கும் பெண்கள் அனைவரும் போராளிகளே..

    ReplyDelete
    Replies
    1. நல்ல விளக்கம் நன்றி சகோ 🙂

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை