தந்தையர் தினம்
இன்றுதந்தையர் தினத்தில் என் தந்தைக்கு சமர்ப்பணம் எத்தனை வருடங்கள் போயினும் அப்பா என்ற வார்த்தை கேட்டு கண்ணீர் வந்தால் அது அப்பா செய்த தவம் ஆறடி உயரம் இருந்தாலும் இரண்டடிக்கு இறங்கி யானை அம்பாரி செய்யும் அப்பாக்கள் வரம். வேலை சோர்வு இருந்தாலும் அப்பா உப்பு மூட்டை என்றவுடன் தூக்கும் அப்பாக்கள் வரம். தன் தோழியிடம் அப்பா பெண் நான் சொல்லும் அளவிற்கு அப்பா இருந்தால் அது பெண் குழந்தைகளுக்கு வரம். பதின் வயதில் தெருவில் நடக்க பயப்படும் பெண்ணிடம் நீ சூரியன் மா தெருவில் நாய்கள் குறைக்கத் தான் செய்யும் என்று தன் கை விடுத்து தனித்து செல்ல வைக்கும் அப்பாக்கள் வரம். தன் மேல் நம்பிக்கை வைத்து தனியே அனுப்பினாலும் அப்பாவின் மகளாய் தலை நிமிர்ந்து நடக்கும் பெண்குழந்தை அப்பா செய்த தவம். வாழ்க்கையில் தோல்விகளுக்கும் ஏளனத்திற்கும் போராட்ட குணம் வளர்க்க உதவும் தந்தை வரம். எதற்கும் அஞ்சா நெஞ்சம் நேர்மையான வாழ்க்கை வாழும் மகள்கள் அப்பாக்கள் செய்த தவம் என் மகள் எது செய்தாலும் தவறாது என நம்பும் அப்பா வரம். அப்பா எது செய்தாலும் தனது நன்மைக்கே என நம்பிக்கை கொண்ட பெண் குழந்தைகள் ...