அப்பா பொண்ணு

         எல்லா பொண்ணுங்களுக்கும் அம்மாவவிட அப்பா ரொம்ப பிடிக்கும் நான் என்ன புதுசா சொல்லப் போறேன்னு பாக்கறீங்களா இன்னையோட அம்பத்தி ரெண்டு வயசு முடியுது.இன்னைக்கு அப்பா ஞாபகம் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு நிறைய பாசமான உறவுகளும் உண்மையான நண்பர்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொன்னாலும் அம்மாவின் சிரித்த முகத்தோடு Happy Bday wish ரொம்ப miss பண்றேன்.
          என்னுடைய flash back 
அம்மாவிற்கு symptoms பாத்துட்டு நான் பையன்னே முடிவு பண்ணிட்டாங்க.அப்பா ஆலிம் படிக்க வெக்கலாம்னு ரொம்ப ஆசை பட்டிருக்கார் . ஆனால் மேட்டூரில் ஜுன் 5ஆம்தேதி இரவு படுக்கறதுக்கு முன்னாடி புழக்கடை போயிட்டு திரும்பி வரும்போ அம்மானால வாசல் படி தாண்ட முடியாம அங்கேயே வந்தாச்சு அவ்ளோ அவசரம் உலகத்தப் பாக்க . கொஞ்சம் முந்திரி கொட்டை தான் நான்.பையன்னு நினைச்சிட்டு பார்த்தா பொண்ணு ஆனா அப்பா ரொம்பவே சந்தோஷப்பட்டாராம் அடுத்த நாள் office ல எல்லோருக்கும் லட்டு குடுத்திருக்கார்.
      சின்ன வயசுலேயே school க்கு ஆயாம்மா பின்னாடியே போயிருக்கேன்.angloIndian Brown miss அவங்க கிட்ட third standard வரைக்கும் படிச்சேன்.ஒவ்வொரு B'day க்கும் gift குடுத்தது இன்ன வரை ஞாபகம் இருக்கு.சின்ன சமையல் சாமான் செட் .blue color and orange colorல அப்புறம் சின்ன பூப்போட்ட skirt bit.அம்மா வீட்டுல குக்கர்ல கேக் செஞ்சு பிரியாணி கண்டிப்பா இருக்கும்.புது ட்ரஸ் உண்டு
அக்கா தான் select பண்ணுவாங்க அவங்களுக்கும் சேத்து எடுத்துக்குவாங்க.இது ரொம்ப வருஷம் தொடர்ந்தது.
        அப்பாவுடன் இருக்கும் போது சின்ன சின்ன விஷயத்துக்கு சந்தோஷமா இருந்தது அது ஏன்னே தெரியல இன்னைக்கு கூட காமராஜர் பத்தி எழுதியிருந்தாங்க சொத்து னு ஒண்ணுமே இல்லை னு.எனக்கு உடனே அப்பாதான் ஞாபகம் வந்தார் அவருக்கும் சொத்து னு ஒண்ணுமே இல்லை அவர் இறக்கும் போது கைல 150ரூ இருந்தது.சூபியைப்போல வாழ்க்கை.
           அம்மா அடிக்கடி சொல்லுவாங்க அப்பா பொண்ணு நீ அவர் நேர்மையா இருக்க நானும் தானே காரணம் என்னயும் பாராட்டனும்னு உண்மை தான் ஆனா நான் சொன்னதேயில்ல.
நல்ல அப்பா அமைவது ஒரு வரம்.தோளிலேயே தூக்கித் திரிந்த என்னை சரியான வயதில் நீ சூரியன்மா நிமிர்ந்து நட என்று நடக்கச் சொல்லித் தந்து படிப்பு மட்டுமே குறிக்கோளாக எண்ணச்சிதறல் இல்லாமல் என்னை வளர்த்த அப்பாவிற்கு இந்த எழுத்து .‌ சமர்ப்பணம். சலீம் பொண்ணு என்பதில் இதுவரை பெருமைதான்.


Comments

  1. மனம் கலங்கி விட்டேன்..எனக்கும் அப்பா ஞாபகம் வந்தது..உணர்வுபூர்வமான பதிவு நஸ்ரத்..

    ReplyDelete
    Replies
    1. அப்பா ஞாபகம் வந்து இதயம் கனத்துப் போகும் பெண்ணைப்பெற்ற அப்பாக்கள் செல்வந்தர்களே

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை