எதிர்பார்ப்புகள்

      ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு    எதிர்பார்ப்பு இருந்துட்டே இருக்கு வாழற வரைக்கும்.நம்மளோடத சொன்னோம்னா இதையெல்லாமா எதிர்பார்ப்பேன்னு மத்தவங்க சொல்லுவாங்க நமக்கு அது பெருசா தெரியும்.

      அது ஆணுக்கும் பொண்ணுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு என்னதான் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைனு கும்மியடிச்சாலும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நம்ம எதிர்பார்ப்பு இருக்கும்.காலைல டீ போட்டு குடுப்போம் நம்மாளு பேப்பர் படிச்சிட்டே டீ குடிப்பாரு ஒரு தடவை டீ சுமாரா இருக்கு இல்லை சூப்பர் னு சொன்னாதான் என்னவாம்.அங்கயே கொஞ்சம் எரிச்சல் ஆரம்பிக்கும்.சின்னதா ஒரு பாராட்டு கிடைச்சிருந்தா அடுத்து டிபன் நல்லா செய்ய தோணும்.
          அடுத்து வேலைக்கு போற பொண்ணா இருந்தா சிரமப்பட்டு ட்ரஸ் பண்ணிட்டு வந்து நிக்கும் அதுவும் கண்ணுக்கு தெரியாது.வேலை செய்யற இடத்தில் பாராட்டு கிடைக்கும் ஆனா நம்ம எதிர்பார்க்கும் நபர் அதாங்க 
நம்ம ஊட்டுக்காரர் சொல்லலேன்னா அது ஏதோவொரு வகையில அங்க காண்பிக்கும்.
           ஆம்பளைங்க எவ்ளோ தான் படிச்சு இருந்தாலும் தன்னோட பொண்டாட்டி நாணி கோணி பூவைச்சு பொட்டு வெச்சு பழைய கால சாவித்திரி மாதிரி பத்மினி மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பு ஆனா இங்கே வேலை செஞ்சு சோர்ந்து போய் உக்கார்ந்து இருப்பா இல்லையா டீவி சீரியல் பாத்துட்டு இருப்பா பேருக்கு தோசை போட்டு குடுத்துட்டு தூங்க 
போவா.இங்க உலக news பாப்பாங்க நம்ம பொண்டாட்டி கூடவே பாக்கணும் னு நினைப்பாங்க.கூடவே எரிச்சல் வரும்.
            இதாவது பரவால்ல குழந்தைங்க மேல் வெக்கற எதிர்பார்ப்பு தான் பெரிய தமாஷ்.நம்ம படிச்சதப் பத்தி நம்ம அம்மா  அப்பாவக்கேட்டாத் தெரியும் ஆனால் நம்ம பையன் கலெக்டர் ஆயிடணும் இல்லை னா அவ்ளோதான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டா மாதிரி ஒரே tension.ஏன் இப்படி உலகத்தில வாழவே முடியாதா நல்லா படிக்கலன்னா .குழந்தை நம்ம வழியா இந்த உலகத்துக்கு வந்திருக்கான் அவ்ளோதான் நம்ம அடிமை இல்லையே அவன் நம்ம சொல்றத யெல்லாம் செய்ய.
           ஆண்டவன் கிட்ட சில சில வேண்டுதல்களை வெச்சிட்டு எதிர்பார்த்திட்டே இருக்க வேண்டியது.அவருக்கு நம்ம மட்டும் தான் இருக்குறோமா சில சமயங்களில் உடனே நடந்திடும் சில சமயம் அவருக்கு காது கேட்காது நம்ம இங்கே அழுது புலம்பி ஏன் இப்படி எனக்கு மட்டுமே நடக்குதுன்னு ஆனாகொரோனாவால புலம்பல் கம்மியாயிடுச்சுன்னு நினைக்கிறேன் உயிரோடு இருக்கிறாயா ஆண்டவருக்கு நன்றினு நிறைய பாக்குறேன்.
         இப்பல்லாம் யார் மேலயும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் முடிஞ்சா ஜாலியா பேசிட்டு யாருக்கும் அட்வைஸ் செய்யாம எல்லாத்துக்கும் மேல எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் அதுவே போதும் னு இருக்கு . ஆனால் இந்த கட்டுரை பத்தி ஏதாவது சொல்லுவீங்க னு ஒரு சின்ன எதிர்பார்ப்போடு முடிக்கிறேன்.எதிர்பார்ப்புகள் இல்லாம வாழ முடியாது ஆனால் அவை அதிகமாகும் போது தான் வீண் மன அழுத்தம்  அதிகரிக்கும்.



    

Comments

  1. மனிதன் வாழ்கையில் தான் எத்தனை எதிர்பார்ப்புகள்
    நற்பிறப்பு
    நற்குடும்பம்
    நற்கல்வி
    நற்பணி
    நற்றுணை
    நன்மக்கள்
    நல்வாழ்க்கை
    நன்னலம்
    நற்சொத்து
    நல்லிறிதி

    இவையனைத்தும் தத்தம் வாரிசுகளுக்கும் என எதிர்பார்ப்புகள் ஒரு தொடர்கதை....

    பிறகு சராசரி வாழ்வில் நுண்ணிய பல எதிர்பார்ப்புகள்...

    பிரச்சினை இல்லா தினமும் ,
    நினைத்தது உடனடியாக நடக்கவும்,
    எளியவர் நம் கட்டளைகள் கீழ்படியவும்,
    நமது ரசனை மற்றவருக்கும் பிடிக்கவும்
    அன்பு சேவை அர்ப்பணிப்புகளுக்கு சிறிய பாராட்டும்,

    என, எதிர்பார்ப்புகளே,அவரவர் வாழ்க்கையை நடத்துகின்றன என எளிதில் புரிய வைத்ததற்கு நன்றி..




    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நல்லதாகவே நடக்க எதிர்பார்க்கிறோம் மாறும் போது தான் துன்பங்கள்.எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் எதிர்பார்ப்புகள் குறைந்து விடும்

      Delete
  2. எதிர்பார்ப்பு நல்லதா கெட்டதான்னு விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னைக்கு நாம எவ்வளவு நொந்து சிரமப்பட்டாலும் படுக்க போறப்போ நாளையில இருந்து எல்லாம் நல்லதா நடக்கும் அப்படிங்கற எதிர்பார்ப்பில தான தூங்க போறோம், அந்த நம்பிக்கையில தான அடுத்த நாள் ஓட்டத்திற்கு தயாராகிறோம்.
    திடீர்னு கடவுள் நம்ம கிட்ட இருக்கிற எதிர்பார்ப்புங்கிற உணர்வை அழிச்சுட்டார்னா அந்த உலகம் எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க.
    நம்ம கிட்ட இருக்கிற ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு சுவை மாதிரி.எல்லா உணர்வும் தேவையான சமயங்கள்ல தேவையான விகிதத்தில கலக்கிறப்ப தான் வாழ்க்கை நளபாகம் மாதிரி சுவையா இருக்கும்.
    அதே மாதிரி நஸ் எல்லா உணர்வும் கலந்து நீங்க எழுதறனால தான் உங்க படைப்பும் சுவாரஸ்யமான இருக்கு👍

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இதைத்தான் எதிர்பார்த்தேன்.எதிர்பார்ப்புகள் இல்லைனா சுவாரஸ்யம் போயிடும் ஆனால் மாத்தி நடந்தாலும் ஏத்துக்கணும்னு பக்குவம் இருந்து இருந்தா tension இருக்காது . விரிவான எழுத்துக்கு நன்றி சங்கீதா

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. No expectation.... no Life.. if understand each other nothing wrong in expectation... expectation will spoil the relationship if there is no better understanding...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா . அதான் இனிமே டீ போட்டு குடுத்தா நல்லாருக்கு னு சொல்லுங்க.புரிதல்கள் நல்ல தலைப்பு

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை