புரிதல்கள்

       உறவுகள் தொடரவும் வாழ்க்கை சிறக்கவும் ஒவ்வொருவருக்கும் புரிதல் இருந்தா நல்லா அமையும்.கணவன் மனைவி ஆசிரியர் மாணவர் முக்கியமா பக்கத்து வீட்டுக்காரர் இப்படி நிறைய combo இருக்கு.இதுல மாமியார் மருமகள் நான் தொடலை.அப்பா பையன் அம்மா பொண்ணு புரிதல் இருந்தா நல்லா இருக்கும்.
     அன்பும் புரிதலும் இருந்தா புளிய இலையில் கூட சாப்பிடலாம்.இது கணவன் மனைவிக்கு.ஆனா நாம் வாழையிலைல கூட ஒண்ணா சாப்பிடறதில்ல.வாசுகிய போல் மனைவி வேணும்னு நினைக்கறவன் தான் வள்ளுவனா இருக்கணும்னு ஏன் நினைக்கறதில்ல.எங்கம்மா சொல்லுவாங்க probationary period னு ரெண்டு வருஷம் சமாளிச்சுட்டா அப்புறம் வாழ்க்கை ஓட்டிடலாம்னு.ஆனா எங்க முடியுது இன்னும் சண்டை ஓஞ்ச பாடில்லை.ஆனா ஒண்ணு என்னதான் சண்டை போட்டாலும் சாப்பிட லேட்டா வந்தா நாமளும் wait பண்றோம் தானே.கோபம் இருந்தாலும் நல்லாத்தானே சமைக்கிறோம்.ஏன் இது ஒரு வித புரிதல்.புரிஞ்சிட்டா சரி.அது என்னமோ தெரியவில்லை நிறைய பேசற பையனுக்கு பேசாத பொண்ணு பேசாதவனுக்கு நிறைய பேசற பொண்ணு இப்படிதான் அமையுது.இத மாத்தறதுக்கு முயற்சி பண்ணுவாங்க அங்கே ஆரம்பிக்கும் போர்.நீ நீயா இருனு எப்போ நாம் நினைக்கிறோமோ அங்க புளிய இலை.
   ஒருத்தர் மேல்ஒருத்தர் பாசம் வெக்கறது தப்பு இல்லை அந்த கயிறு நெருக்குதுன்னு யாருக்காவது தோணுச்சுன்னு உடனே relax பண்ணனும்.இல்லைன்னா விட்டா போதுங்கற மனநிலை வந்திடும்.வலது இடதுனு மாத்தி மாத்தி கால் வெச்சா தாங்க நடக்க முடியும்.ஒரே கால்ல போலாம்னு நினைச்சா வாழ்க்கை நொண்டியடிக்கும்.
       ஆசிரியர் மாணவர் புரிதல் எவ்ளோ முக்கியம்னா ஏதாவது ஒரு நாள் பாக்க நேர்ந்தா அட நம்ம டீச்சர் பான்னும் நம்ம பையனில்ல ன்னும் தோணுச்சு னாவே போதும்.எப்பவுமே திட்டிட்டே இருக்காங்க என்ன செஞ்சாலும் திருப்தியில்லை குறையே கண்டுபிடிக்கறதுன்னு நிறைய டீச்சர் இருப்பாங்க அதுல நானும் ஒண்ணு.சில பசங்க கரெக்டா புரிஞ்சுட்டு சரி பண்ணி சரி பண்ணி topல வந்துடுவாங்க.2007ல நான் GCT ல part-time ME படிச்சேன்.வராண்டால நடந்து போயிட்டு இருக்கும்போது ஒரு மாணவன் collect பண்ண fees பணத்தை அழகா tally பண்ணிட்டு இருந்தான்.அவனோட செய்கை அவ்ளோ நல்லா இருந்தது.நான் பாத்துட்டே கடந்துட்டேன்.பின்னாடியே miss missnu கூப்பிடற சத்தம் திரும்பி பார்த்தா அந்த பையன் . நான் உங்க student சித்தார்த் மறந்துட்டீங்களான்னு .
       அந்த ஒரு சந்தோஷம்தான் . எல்லாவற்றையும் மறந்து போக வைக்கும்.தத்தம் தலையை திருப்பி கொண்டு போகாமல் நான் இன்னார்னு பேசறதில இருக்கு புரிதல்கள்.
          கணவரோடு சண்டை பிரச்சினை இல்லை ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் கூட எப்பவுமே நல்ல நட்பா இருக்கணும்.நம்ம சொந்தங்கள் எல்லாம் தூரமாத்தான் இருப்பாங்க.ஆபத்துக்கு உதவறதுக்கு மட்டும் இல்லை பேசாம தொந்தரவு பண்ணாம இருக்கணும்னாலும் நல்ல புரிதல் இருக்கணும்.இல்லனா சின்ன இலை விழுந்தால் கூட சண்டை வரும்.பக்கத்து வீட்டு பாட்டினால ஒரு தடவை சண்டை ஆயிடுச்சு.ஒரு வருஷம் வரை பேசிக்கல . யார் முதல்ல  பேசறதுன்னு ego அவங்க பொண்ணு விசேஷத்துக்கு அழைக்க வந்தாங்க அப்படியே எல்லாம் மறந்து நல்லபடியா கலந்துகிட்டோம்.இன்னவரை நாம் முதல்ல பேசியிருக்கலாமேன்னு குத்திட்டே இருக்கு.எதார்த்தமான நட்பு இன்ன வரை தொடர்ந்துட்டு இருக்கு.அவங்க பையன் ஆஸ்திரேலியா போகும் போது எங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.ஒரு முறையல்ல ஒவ்வொரு முறையும்.நிஜமான சந்தோஷம்.
          அப்பா பையன் உறவு . தான் பட்ட கஷ்டங்கள் தன் பையன் பட்டுறக்கூடாதுன்னு தவிப்பில் நிறைய அட்வைஸ் இது புரிஞ்சுக்க பாத்தான்னா அந்த பையன் பெரிய ஆள்.இல்லைனா இந்தப்பாக்கு வேற வேலையில்ல.இவரு மட்டும் ஜாலியா இருந்தாராம் நமக்கு சொல்றாருன்னு நினைச்சான்னா சங்கடம் தான்.
        அம்மா பொண்ணு புரிதல் எப்படின்னா பத்து வயசு வரைக்கும் விட்டுடுவாங்க. திடீரென எல்லா தடைகளும் போடும்போது சுத்தமா ஒத்து வராது.அப்படியே வளரும்.ஒரு கட்டத்தில் நல்ல friend ஆயிடும் அம்மா கூட.கல்யாணம் ஆற வரைக்கும்.அப்புறமா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கணும் இல்லைனா பொண்ணு அம்மா கூட இருந்தா சந்தோஷமா இருக்கும்னு தோணிடுச்சுன்னா அவ வாழ்க்கை முடிவுக்கு வந்தது னு அர்த்தம்.அம்மாகிட்ட எல்லா விஷயங்களையும் பகிரக்கூடாதுனு பொண்ணு புரிஞ்சுக்க பாத்தான்னா போதும்.
      நிறைய நிறைய உறவுகள் சரியான புரிதல்கள் இல்லாமல் அப்படியே உடைந்து போய் விடும்.விட்டுக்குடுப்பவர் கெட்டுப்போவதில்லை.கெட்டுப்போறவர் விட்டு குடும்பத்தில் லை.

Comments

  1. என்னதான் சண்டை போட்டாலும் சாப்பிட லேட்டா வந்தா நாமளும் wait பண்றோம் தானே.கோபம் இருந்தாலும் நல்லாத்தானே சமைக்கிறோம்.ஏன் இது ஒரு வித புரிதல்.

    தான் பட்ட கஷ்டங்கள் தன் பையன் பட்டுறக்கூடாதுன்னு தவிப்பில் நிறைய அட்வைஸ் இது புரிஞ்சுக்க பாத்தான்னா அந்த பையன் பெரிய ஆள்.

    நிறைய நிறைய உறவுகள் சரியான புரிதல்கள் இல்லாமல் அப்படியே உடைந்து போய் விடும்.விட்டுக்குடுப்பவர் கெட்டுப்போவதில்லை.
    மிக எதார்த்தமாய் ல் பல உளவியல் விசயங்களை போகிற போக்கி கூறும் உங்கள் அனுபவம் கலந்த எழுத்து படிக்க மிக்க நன்றாக உள்ளது..தொடரட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. Reality of life , Only knows when one get experienced over a period at different stages (ages) of life
      Experience speaks better than age.

      Delete
    2. Very true.age is not a factor.everyday experiences make us to refine.thank u.ur name is not shown .

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை