சமையலுக்கு ஆள்

     என் பேர் பாத்துட்டு நல்லா சமைப்பேன்னு நினைச்சா பாதி ஆமாம் பாதி இல்லை.லைட்டர்னு வந்த பின்னதான் அடுப்பு பத்த வெச்சேன்.chemistry labla bunsen burner பத்த வைக்க பக்கத்தில் கெஞ்சின ஆளு நான்.
      ஏனோ சமைக்க இஷ்டப்படவே இல்லை. டீ போடக்கூட தெரியாது.கல்யாணம் நிச்சயமான பின்ன மாமியாரும் நாத்தனாரும் திடீர்னு வீட்டுக்கு வர அம்மா வெளியே போயிருந்தார்.யோசிச்சு பாத்து பால் சூடு பண்ணி horlicks போட்டுக்குடுத்தேன்.😄கூட்டுக்குடும்பம்கறதால😄 மாமியார் என்னை எடுபிடி வேலைக்குத்தான் வைத்து கொண்டார்.எனக்கும் ஜாலி.
  அஞ்சு வருஷம் கழிச்சு தனிக்குடித்தனம்.அப்போல்லாம் ஃபோனும் இல்லை அம்மாகிட்டே கேட்டு சமைக்க.பையனை ஏழரை மணிக்கு அனுப்பணும் அப்புறம் நானும் அவரும் வேலைக்குப் போகணும் ‌.எப்படியோ சமையல் பழகிட்டேன்.
     வீட்ல அவருக்கும் எனக்கும் சண்டை வந்து அப்புறம் agreement வெளியே கடைக்கு போற வேல அவரோடது சமையல் நான் மேல் வேலைக்கு ஆள்.முடியாத பட்சத்தில் ஹோட்டல்.அப்போ அப்போ எங்கம்மா சமைச்சா நல்லாருக்கும் னு கமெண்ட் வரும்.அது அப்படியே மருவி நம்ம வீட்டு சமையல் மாதிரி வேற எங்கேயும் இல்லை னு சொல்ற அளவுக்கு மாறிடுச்சு. போன வருஷம் திடீர்னு நிலைமை தலைகீழாக சரீனு சமைக்க ஆள் என்னையும் பாத்துட்டு சமையலுக்கும் சேத்து வெச்சோம்.இருபது நாள் பல்லைக்கடிச்சிட்டு இருந்தோம்.எல்லாப்பொருளும் காலியாகுது.அருவாமணை  வேணும்கத்திவேணும் உடனேனு இவரா கடைக்கு போயிட்டே இருக்கார்.எனக்கே பாவமாப்போயிடுச்சு.என்ன இருந்தாலும் நான் வேலை வாங்கறது வேற மத்தவங்க வாங்குனா சரியில்லை இல்லையா .சமைக்கறது குப்பைக்கு தான் போகுது.பையனோ swiggy ல.நடுவீட்டுல டீவி போட்டுட்டு அம்மணி ஜாலியா.நீ கிளம்புமானு அனுப்பிட்டோம்.
          அடுத்து ஒரு அம்மா சமைக்க நான் சொல்லி குடுக்கறதுக்குள்ள நானே சமைச்சுடலாம்னு ஆயிடுச்சு.என் பையன் சொன்னான் நானும் அப்பாவும் எப்படியோ சாப்பிட்டுக்கறோம் நீங்களே சமைச்சிடுங்கன்னு.காலைல மெஸ்ல
மதியம் எனக்கு மட்டும் அவங்க ரெண்டு பேரும் வெளில இரவு தோசைனு முடிவாச்சு.அடுத்து ஒரு அம்மா ஆஹா ஹோட்டல் ல வேல செஞ்சது போல் படபடனு வேல செய்யும் ஆனா கொத்துமல்லி வேரோடு ரசத்துல வரும்.ஆனா மாவு மட்டும் சலிக்காம அரைச்சு தோசை போட்டு குடுக்கும்.சாப்பாடு ஒரு நாள் கொழ கொழனு மறுநாள் அரிசி அரிசியா .வீட்டில காசு குடுத்து வினை னு சொல்ல அதுவா நின்னுடுச்சு‌.
            கொஞ்ச நாள் நானே சமைச்சுடலாம்னு செஞ்சிட்டு இருக்க ஒரு மலயாளக்காரம்மா வந்தது.பத்து நாள் அவங்க கூடவே நின்று சொல்லி குடுக்க கத்துக்கிட்டாங்க அப்பாடா னு நினைக்கறதுக்குள்ள lockdown ஆரம்பிச்சுடுச்சு.எல்லாரும் வீட்ல அப்புறம் hotels இல்லை.நானே முழு பொறுப்பு.induction stove ல பாதி சமையல் சப்பாத்தி மஞ்சூரியன் எல்லாம் சமைக்க கொஞ்சம் நல்லாவே போச்சு.
       ரெண்டு மாசம் தாக்கு பிடிச்சேன்.வெயில்னால கஷ்டமாஇருந்தது.மறுபடி try பண்ணலாம் னு ஒரு அம்மாவ சேத்து ஒவ்வொண்ணுக்கும் சொல்லி குடுத்து சொல்லி குடுத்து சரி செய்யவேமுடியல.கிச்சன்  முழுசும் குப்பை போட்டு அப்புறமா சுத்தம் செய்யறது.வீட்டில எனக்காக பொறுத்துக்க பையனோ மறுபடி வெளியவே வாங்கி சாப்பிட்டுக்கறேன்மா என்று நழுவ என்னால சாப்பிட முடியல னு வீட்டுக்காரர் அம்மா வீட்டுக்குப் ப்போய்க்கிறேன்னு போக முடியலடா சாமி .வேணாம்னு நிறுத்தியாச்சு.
      அப்படி ஒரு நிம்மதி.சமையலுக்கு ஆள் வைப்பது என்பது தனிக்கலை.எனக்கு வரவேயில்லை.அவங்க என்ன சமைச்சாலும் சாப்பிட பொறுமை இருக்கணும்.இங்க ரெண்டுமே இல்லை.வீட்டில ரெண்டு பேரும் நீங்க என்ன சமைச்சாலும் நல்லாருக்கு னு சொல்றாங்க.உண்மையோ பொய்யோ எனக்கே நான் சமைக்கறதுதான் இப்பல்லாம். பிடிச்சிருக்கு.

Comments

  1. Saaptulu Unmaya thavira vera eduvum theriyathu ,My lord , ,I'm in totally arrest in Tasty food.

    ReplyDelete
  2. இது தான் நல்லது... திருப்தியும் கூட...

    ReplyDelete
  3. நாமே சமைத்துக் கொள்வது எப்போதுமே நல்லது! வெளியாட்களின் சமையல் நமக்கு ஒத்து வருவது கொஞ்சம் கடினம் தான். அவர்கள் கடமைக்குச் சமைப்பதால் சுவை இருப்பதில்லை. வீட்டிலுள்ளவர்கள் பாசத்துடன் சமைப்பதால் அந்த சமையலில் கூடுதல் ருசி என்று சொல்வதுண்டே.

    உங்கள் அனுபங்களை எழுதியது நன்று.

    முடிந்தால் Follow by e-mail அல்லது Followers Gadget சேர்த்து விடுங்கள். புதிய பதிவு வரும்போது தொடர்பவர்களுக்கு தகவல் வரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை . வருகைக்கு நன்றி🙏

      Delete
  4. நம் கையே நமக்குதவின்ங்க. உங்கள் சூழல் புரிகிறதுதான்.

    கூழானாலும் நாமே செஞ்சு சாப்பிட்டா அதில் திருப்தி இருக்கும். வெங்கட்ஜி சொன்னது போல வெளியாட்கள் சமையலை விட வீட்டிலுள்ளவர்கள் சமைக்கும் போது பெர்சனல் டச் இருக்கும்.

    //முடிந்தால் Follow by e-mail அல்லது Followers Gadget சேர்த்து விடுங்கள். புதிய பதிவு வரும்போது தொடர்பவர்களுக்கு தகவல் வரும்.// வெங்கட்ஜி சொல்லியிருப்பதை நாங்களும் வழி மொழிகிறோம்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  5. நன்றி சார்.வீட்ல இருக்கறவங்களும் ரசம் வெச்சு முட்டை போட்டு குடுத்தா போதும் நல்லாருக்குன்ற அளவுக்கு வந்தாச்சு😄😄😄

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை