அழுக்கு

    திரைப்படம் அவ்வளவா பார்ப்பதில்லை.review பார்த்து நாலு பேர் நல்லா இருக்கு னு சொன்ன பின்னர் போறதுக்குள்ள படத்த எடுத்துடுவாங்க கடைசியாக கஜினிகாந்த் பார்த்த ஞாபகம்.நான் பாப்கார்ன் காக போற ஆள்.இப்போ அதுவும் டேஸ்ட் இல்லை.இப்போ தியேட்டரும் திறந்து இல்லை.
    அமேசான் ல பொன்மகள் வந்தாள் பார்த்தேன்.ரெண்டு நாளாக மனசு சரியில்லை. பெண்குழந்தைகள் வன்கொடுமை . என்ன சொல்ல பணக்கார பையன்கள் திமிரெடுத்து அலைவதையும் அதை அப்பாக்கள் support செய்வதையும் எடுத்திருக்கிறார்கள்.ஆனால் இதில் shoot at sight . நிஜத்தில் இப்படி நடப்பதில்லை ‌.இதைவிட மோசம் . ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நல்லபடியா வளர்க்க எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் அதையும் தாண்டி இப்படி ஆங்காங்கே நடந்து விடுகிறது.எல்லாவற்றிற்கும் போதை தான் ஆதிமூலம்.ஒரு வீடியோ பார்த்தேன்.பூனை கஞ்சா இலை சாப்பிட்டு தலைகீழாக ரெண்டு கால்ல நடந்து போகுது.
      நான் சிறுவயதில் எவ்ளோ சுதந்திரமா வளர்ந்தேன்.பொற்காலம்னே சொல்லலாம்.கிருஷ்ணா திருத்தணியில் அவர்தான் எல்லாம் ஷு போட்டு விட்டு சைக்கிள் பாரில் டவல் போட்டு என்னை உட்கார வைத்து school கொண்டு விட கூட்டி வர எல்லாம்.சாயந்தரமா மறுபடி சைக்கிளில் ரவுண்ட்.எந்த வித விகல்பமும் இல்லைஆறு வயது வரை .அப்பறம் சாத்தனூரில் அர்ச்சுனா.அவருடன் இருந்த நேரம் தான் அதிகம்.மரம் ஏற பால் கறக்க விதைகள் போட நாயுடன் விளையாட தேன் பெட்டியிலிருந்து தேன் எடுக்க கோழி இட்ட முட்டை எடுக்க குஞ்சுகள் பொரிக்கும் போது எல்லாம் நானில்லாமல் இல்லை.சின்ன பாப்பா நான்.அர்ச்சுனா அப்பா கூப்பிடறார். இது ஒரு விளையாட்டு.எந்த வேலை யாயிருந்தாலும் உடனே போட்டு விட்டு ஓடி வருவார்.அப்பா நான் கூப்பிடலயே என்பார் . அது ஒரு சந்தோஷம்.தீய எண்ணங்கள் கொண்ட ஆண்கள் இல்லாத வாழ்க்கை சூழல்  எங்கள் 
பிள்ளைப்பருவம்அருமையானது.
எதார்த்தமானது.நிஜமாகவே ஒன்றுமறியாமல்தான் வளர்ந்தோம்.
      ஆனால் பெண் குழந்தைகள் இப்போல்லாம் உஷாராகத்தான் இருக்கிறார்கள்.இருந்தாலும் தவறுகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது . போதைப்பொருள் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.ஒரு கதை உண்டு.ஒருத்தனிடம் மூன்று விஷயங்கள் செய்யணும்.குழந்தையை கொல்லணும் குடி குடிக்கணும் பெண்ணை கற்பழிக்கணும்.
அவன் நேரா போய் குடிச்சான் வெறில பெண்ணை அழிச்சான் அதே வெறில குழந்தைய கொன்றான்.எல்லாவற்றுக்கும் போதை தான் காரணம் என சொல்லவும் வேண்டுமா.எத்தனை கோர்ட்கள் காவல் நிலையங்கள் பத்திரிகைகள் மீடியாக்கள்
     ஆனால் விடியல் தான் தெரியவில்லை.

Comments

  1. அருமையான பதிவு, நஸ்ரத். நம்மில் பலர் அனுபவித்து வந்த கேவலம் தான், இது. அன்றும், இன்றும், என்றும் தொடரக்கூடிய ஒரு ''அழுக்கு'!

    ReplyDelete
    Replies
    1. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்.ஆனா எப்படின்னு தான் தெரியல

      Delete
  2. செய்திகளில் சிறு குழந்தைகள் முதல் பெரிய பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பார்க்கும் போது சுட்டு கொல்ல வேண்டும் என ஆத்திரம் கிளம்பும். பெண்களுக்கு எதிரான இச்சம்பவங்களுக்கு,திரைப்படம் ,தீய சேர்க்கை,போதை,வக்கிர மனம் என பல காரணங்கள் அடுக்கி கொண்டு போகலாம் .ஆணின் வளர்ப்பு மட்டும் பெண் குழந்தைகளை எந்த ஆணிடமும் எச்சரிக்கை பற்றிய விழிப்புணர்வு மட்டுமே மாறுதலுக்கு வழி வகுக்கும்.. நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக உண்மை.உங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி சகோ

      Delete
  3. மிக நல்ல பதிவு.

    பெண்குழந்தைகளை இப்போது வளர்ப்பது என்பது ரொம்பவே ரிஸ்க் போலத்தான் தோன்றுகிறது.

    சமீபத்தில் கூட ஒரு திருமணம் நடந்த போது பேரன் பெற்றுக் கொடு பேத்தி வேண்டாம் பயமாயிருக்கு என்று சொல்லக் கேட்டதும் உண்டு. வீட்டிற்குப் பெண் குழந்தை என்றால் போற்றி போற்றி வளர்க்கப்பட்டக் காலம் ஒன்று . இடையில் பெண் சிசுவைக் கொல்வது கூட நடந்தது. பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்லும் அளவு . மனது வேதனையான விஷயம் இது.

    சிறு பெண் குழந்தைகளைச் சீரழிக்கும் போது தெய்வம் இருப்பது எங்கே என்று கேட்கவும் தோன்றுகிறது (கீதா)

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  4. தெய்வம் என்ன செய்யும் சார்.வழிகளைத்தான் தரும் நாம்தான் நல்வழியில் போகணும்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்

    ReplyDelete
  5. மனதைத் தொட்ட பதிவு. எத்தனை எத்தனை இழப்புகள். வக்கிர புத்தியுடன் அலைபவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். விதம் விதமான போதைகள் அவர்களை எது வேண்டுமானாலும் செய்ய வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக உண்மை.ஏதாவது செய்து போதைப்பொருட்களை தடுக்க முடியாதா என்று மனம் ஏங்குகிறது.

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை