வலிகள்

  நான் எழுதலாம்னு முடிவு செஞ்சப்போ என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுதணும் சோகங்களையும் சிரிக்கிற மாதிரி தான் எழுதணும்னு முடிவு பண்ணேன்.
     ஏனோ தெரியலை ரொம்பவே என்னை ஆட்டிப்படைக்குது.கொரோனா ஒரு பக்கம் னா சாத்தான்குளம் கொலைகள் ,தள்ளுவண்டி பெண், அல்வாக்கடை அதிபர் தற்கொலை ,நெய்வேலி விபத்து என்ன நடக்குதுன்னே தெரியல.
   ஒரே நேரத்தில் எல்லாமே சரியாகக்கூடாதான்னு மனசு ஏங்குது.போன வாரம் பேரூர் குளம் பாக்கலாம் னு போனோம்.விதவிதமா பறவைங்க போர்ட்ல தான் வரைஞ்சிருக்கு ஒண்ணும் காணோம்.என்னப்பாக்கப்பிடிக்கல போல.உக்கடம் மீன் மார்க்கெட் வழியாகத்தான் போனோம்.எல்லோரும் வரிசையில் மூங்கில் கம்புகள் கட்டி நன்றாகவே இருந்தது.கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்.
    பூமார்க்கெட் ரோட்டில் முழுசுமே பூக்கள் வாசனை அப்படி இழுக்கும்.இப்போ ரோட்டோரம் முழுதும் நகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதினு பார்த்தாலே மனசுல ஒரு வலி.
    புது பஸ் ஸ்டாண்டில் ஒரு ஊட்டி பஸ் இல்லை. எவ்ளோ கூட்டம் நிக்கும்.மனசு சரியில்லை னு தான் வெளியே போனேன்.ஆனா இன்னும் பாரமாயிடுச்சு.ஆனா மக்கள் எல்லாத்தையும் பொறுத்துக்கறாங்கன்னு தான் தோணுது.
     விசாரணை க் கைதிங்கள விசாரிச்சா மாதிரி தான் விசாரிச்சோம் இப்படி நடக்கும் னு தெரியலங்கறார் போலிஸ்காரர்.கடை திறந்து வெச்சது அவ்ளோ பெரிய குத்தமா பெண்கள கற்பழிச்சவன எல்லாம் போலீஸ் இப்படி விசாரிச்சதா .அவனுங்களப் பார்த்தா அவ்ளோ சந்தோஷமா இருக்காங்க.
    75 வயதுப் பெரியவர் இருட்டுக்கடை அல்வா இத்தன வருஷமா பேர் கெடாம பாத்துட்டு இருந்தவர்.எத்தன கஷ்டங்களை அவர் வாழ்க்ககைல பாத்திருப்பார்.நோயோட வலி தாங்காம தற்கொலை செஞ்சிருக்கார்.
  தள்ளுவண்டி பெண் கிட்ட நம்ம போலீஸ் வீரத்த காட்டியிருக்கு.ஒரு மணிநேரம் அதிகமா இருந்தா கொரோனா வந்துடும்னு.சரி அமைச்சர் பொண்ணு கல்யாணம் அம்பது பேர் வெச்சு நடத்தினாங்களா‌.அங்கே பேச முடியுமா.சட்டம் எல்லாருக்கும் சமம்தானே.
   இதெல்லாம் சீக்கிரமா மாறாதா.இயற்கைப்பேரிடர்லாம் வந்தப்போ எவ்ளோ மனித நேயம் இதெல்லாம் ஏன் இப்போ இல்லை ‌.

Comments

  1. தமிழர் எல்லோர் மனதிலும் உள்ள கேள்விகள் மற்றும் ஆதங்கமே இங்கே உங்களின் கருப்பு வெள்ளை வெளிப்பாடு ..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய சம்பவங்கள் என்னால் எழுத முடியவில்லை என்பதே நிஜம்.🙏🙏

      Delete
  2. ஆம் ஒவ்வொருநாள் செய்திகளும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் உள்ளத்திய பாசிட்டிவாகவே வைத்துக் கொள்வோம். அப்போதுதான் மனம் நன்றாகவும் இருக்கும் இல்லை என்றால் சோர்ந்து போகும். விரைவில் இந்த நிலை மாற வேண்டும் மாறிவிடும் என்று நம்புவோம்!

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை .இந்நிலை மாற வேண்டும் மாறி விடும் மாறணும்🙏😊

      Delete
  3. உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்களுக்குத்தான் சமூகக்கவலை வரும் தங்களது முகவரி தென்படுகிறது.
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி.கொஞ்சம் மாறினாலும் மகிழ்ச்சி🙏

      Delete
  4. இருட்டுக்கடை அதிபர் தற்கொலையில் ஒரு வாட்சப் செய்தியில் அவரது வீட்டினர் யாரும் அவரது அலைபேசி அழைப்புக்கு மறுமொழி தரவில்லை என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான last straw on the camel's back அதுதான் என்று புரிந்துகொள்ளவேண்டுமோ?

    நீங்கள் கோவையில் இருக்கிறீர்கள், பரவாயில்லை. நான் இருப்பது சென்னையில்! வெளியே போவதற்கே அனுமதி இல்லையே! நாளை முதல் முடியுமா என்று பார்க்கவேண்டும்.

    எதற்கும் நம்மை நாம்தான் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். We need not and should not take others for granted, be their our relatives or friends.

    ReplyDelete
  5. எதற்கும் நம்மை நாமே நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்.உண்மைதான் ஏன்னா வலிகள் அவரவர் க்குத்தான் யாருக்கும் தர முடியாது.நன்றி சார்

    ReplyDelete
  6. இன்றைக்கு நாம் கேட்பதும், காண்பதும் எல்லாமே ஒரு வித மன உளைச்சலைத் தருவதாகவே இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்ற மனதைரியத்துடன் தான் தினம் தினம் நாட்களைக் கடத்துகிறோம். விரைவில் சூழல் சரியாக வேண்டும். சரியாகும் என்ற நம்பிக்கையுடன் தொடர்வோம்.

    ReplyDelete
    Replies
    1. மிக உண்மை.இதுவும் கடந்து போகும் . நிச்சயமாக😊🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை