மகள்


       எனக்கு நல்ல அம்மா அப்பா அவங்கள பத்தி சொல்லியிருக்கேன்.இன்னும் நிறைய சொல்லணும்.ஆனா நான் நல்ல மகளா இருந்திருக்கேனா.இன்னைக்குதாங்க தோணுச்சு.Am I a good daughter அம்மா அப்பா கிட்ட கேட்டதில்லை.இப்போ கேக்கலாம் னா ரெண்டு பேரும் இல்லை.

சுய பரிசோதனை நிறைய கேள்விகள் ஓடுது காலைலேருந்து.நிஜமா பதிலே இல்லை.எனக்கு மார்க் போட்டா just pass தான் வந்தது.

       அம்மா அப்பா இருந்து இருந்தா கண்டிப்பா நெறய போட்டிருப்பாங்க.

எவ்ளோ பிடிவாதம் சட்டுனு கோபம் பிடிக்கலன்ன மூஞ்சிய காமிக்கறது அழறதுனு சொல்லிட்டே போலாம்.அப்பா திட்டியதும் இல்லை என்னை விட்டுக்கொடுத்ததும் இல்லை.நான் sister ஆ போறேன் னு அப்பா கிட்ட சொன்னதும் எதுவும் சொல்லாமல் சரிமா என்று எப்படி சொல்ல முடியும்.அவர் மனம்  கஷ்டப்படும் னு எனக்கு ஏன் தோணல.அவருக்காக நான் செய்தது BE படிச்சது எனக்கு ஒரு advice சொன்னார்.first class வாங்கிடுமானு அது செஞ்சேன்.என் அப்பாவின் தலை நிமிர்ந்து இருக்கணும்னா என் தலை குனிந்து இருக்கணும்னு எப்பவுமே எனக்கு தோணிட்டே இருக்கும்.இது ஒண்ணுதான் நல்ல மகளா என்னை எடுத்துக்கலாம்.

          உறவுகளுக்கு உதவணும் ஏழைகளுக்கு இரக்கம் காட்டணும் உண்மைய பேசணும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது.அப்பாவோட பழக்கம்.அட பரவால்ல நானும் தான்.எழுத ஆரம்பிச்சப்போ ரொம்ப low ah feel பண்ணேன்.இப்போ எனக்கு மார்க் கொஞ்சம் கூடிடுச்சு.I love u pa

     அம்மாக்கு நான் நல்ல பொண்ணா இருந்தேனான்னு பார்த்தா கல்யாணத்துக்கு முன்னாடி ரொம்ப படுத்தினேன்.அப்புறமா நிறைய மாறுனேன்.புகுந்த வீட்டுக்கதய நான் சொன்னதேயில்ல.அப்பாயில்லாம அம்மா கஸ்டப்பட்டு பண்ணாங்க.நிறைய விஷயங்கள் சொன்னதேயில்ல.இது ஒண்ணுதான் நான் அவங்களுக்கு செஞ்ச கைம்மாறு னே சொல்லலாம்.அம்மா மிக தைரியம் தனியா தான் வாழ்ந்தாங்க சிக்கன் குனியா வந்தப்போ என்னை வரவேண்டாம்னு அவங்களே சமாளிச்சாங்க.அவங்க வேண்டுதல் ஒரு நாள் கூட படுத்துடக்கூடாதுனு அப்படியே நடந்தது.போன வருஷம் அம்மா வோட தைரியம் தான் நான் மீண்டு வந்தது .அம்மாவோட மகளா நான் நிரூபிச்சது. I love u ma

      அம்மா அப்பா ரெண்டு பேரும் என்மேல் அன்பா.ஆனா நான் எப்பவுமே அவங்கள மிரட்ன மாதிரி தான் ஞாபகம்.இத சாப்டாத அது சாப்டாதனு .அம்மாவ சொல்லிட்டே இருப்பேன் யார் வேணா கூட இருக்கலாம் ஆனா வலி நாம்தான் தாங்கணும்னு இப்போ என் பையன் எனக்கு சொல்றான்

அம்மா உன்ன நீதான் பாத்துக்கணும்.ஆனா திருப்தி இல்லை மறுபடி குழப்பமாத்தான் இருக்கு நான் நல்ல மகளா இருந்தேனான்னு. இல்லை இல்லை நான் நல்ல மகள்தான் positive ஆகவே எடுத்துப்போம்.

Comments

  1. You are trying to evaluate yourself by introspection. This itself shows that you are a good human 👍

    ReplyDelete
  2. ஒரு நல்ல கதையோ சினிமாவோ பாடலோ,படித்த அ பார்த்த கேட்ட பிறகு யோசிக்க வைக்க வேண்டும் ,உங்களுடைய பதிவும் படித்த பின்பு என்னை யோசிக்க வைத்தது....

    நான் நல்ல மகனாக இருந்தேனா ?

    அவங்க வேண்டுதல் ஒரு நாள் கூட படுத்துடக்கூடாதுனு அப்படியே நடந்தது...என் அப்பாவும் அப்படியே

    போன வருஷம் அம்மா வோட தைரியம் தான் நான் மீண்டுவந்தது .....இது நாங்கள் மிக பெரிதும் வியக்கும் உங்கள் மனோதிடம்

    வலி நாம்தான் தாங்கணும்னு இப்போ என் பையன் எனக்கு சொல்றான்.....எவ்வளவு பெரிய உண்மை

    போகிற போக்கில் எத்தனை விதமான வாழ்க்கையின் அனுபவங்கள் எண்ணங்கள் ,ஒரு மகளின் பார்வையில்..

    என் போன்ற ஆண்கள் ,அட நம் மனைவியும் ஒருவரின் மகளே,அவர்களுக்கும் நம் போன்றே உணர்வு சிந்தனை விருப்பு வெறுப்பு இருக்குமல்லவா என என்னை சிந்திக்க தூண்டியது....பாராட்டுக்கள், நிறைய எழுதுங்கள்..

    ReplyDelete
  3. நன்றி செந்தில் .மனைவியும் இன்னொருவரின் மகள் . அனுபவம் நிறைய கற்றுத்தருகிறது.

    ReplyDelete
  4. I like this line, என் அப்பாவின் தலை நிமிர்ந்து இருக்கணும்னா என் தலை குனிந்து இருக்கணும்னு எப்பவுமே எனக்கு தோணிட்டே இருக்கும்.

    As a son to my father, I also having the same till date

    ReplyDelete
  5. Yes our generation though we got freedom to do whatever we want we are good because we respect our parents.thank you Elango

    ReplyDelete
  6. எண்ணங்கள் சிறக்கட்டும்...

    ReplyDelete
  7. நன்றி தனபாலன் சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை