ரோஜாவா நான்

 World 🌹 day

  இரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் ஒரு டாக்டரை கூப்பிட்டு awareness program நடத்திய ஆள் தான் நான். plastic னால cancer வரும்னு college canteen ல் plastic tumbler  ஒழித்ததில் என்னுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.ஆனால் என்னவோ தெரியவில்லை எனக்கு அந்த big C விழிப்புணர்வு இல்லாமல் போனது.

சென்ற வருட அனுபவம் எழுதணும் தனியா.இப்போ கொஞ்சம் மட்டும்.படித்த முட்டாள கேள்விப்பட்டு இருப்பீங்க.அது இதோ இங்கே அட  நாந்தான்.doctor , படிச்சவங்க நீங்க எப்படீங்க ஏமாந்தீங்கனு கேட்டப்போதான் எவ்ளோ முட்டாளா இருந்துட்டேன்னு வருத்தமா இருந்தது அழுதேன்..இத எழுதறது படிக்கறவங்க கவனமா இருக்கணும் னு தான்.

      Google is not a doctor.இங்கதான் ஏமாந்தேன்.google ல சொன்ன big C யோட 14symptoms ல எதுவுமே எனக்கு இல்லை.medical doubts மட்டும் google பண்ணி பாக்க வேணாம் தயவுசெய்து.தயக்கம்தான் Dr கிட்ட போக அப்புறம் நமக்கு என்ன கெட்ட பழக்கம் இருக்கு வர்றதுக்கு னு எண்ணம்.சின்னதா இருக்கும் போது பார்த்தா சிரமங்கள் இல்லை. வருமுன் காப்போம்.இல்லனா கஷ்டம்தான்.திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாறிவிட்டது.என்னை பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் கேள்விப்பட்டு அதிர்ந்து போனார்கள்.நான் அப்பவும் என் மகனிடம் மடத்தனமான கேள்வி கேட்டேன் இப்படியே இருந்தா என்னாகும் னு.பைத்தியமா நீ என்று திட்டினான்.எனக்கு சந்தேகம் வந்து அவனிடம் சொன்னப்போ உடனே செக்கப் போம்மா என்றபோதுகூட ரெண்டு மாசம் கழிச்சு போனேன்.இந்த தவறும் யாரும் செய்திடாதீங்க.

Dr சொன்ன ஆறுதல் don't get panic . இதுதான் எல்லா வியாதிக்கும் முதலில்.இன்னொன்னு ignorance is a bliss . ஆமாம் ரொம்ப தெரிஞ்சுக்கல.எல்லாவற்றையும் விட நண்பர்கள் மற்றும்  watsapp எனக்கு நல்ல மருந்து.சின்ன blood test செய்யவே பயப்பட்ட ஆள் நீண்ட பயணமே மேற்கொண்டேன்.அம்பது வருஷத்தில் ஏழு மாசம் கஷ்டப்பட மாட்டியா என்றும் இவ்ளோ பேசற இந்த வலிய தாங்க மாட்டியான்னும் நான் எந்த பாவமும் செய்யலியே னு சொன்னா குழந்தைங்க என்னமா பண்ணுச்சு அதவிடவா நீன்னும் பேசி பேசி தைரியமா face பண்ண ஆரம்பிச்சேன்.கண்ணாடிய அவ்வளவா பாக்காத நான் தினமும் பார்த்து அழுதேன்.அப்புறம் என்னை பார்த்து I love u nusrath நீ அழகுடா செல்லம் nu சொல்ல ஆரம்பிச்சேன்.நல்ல மாற்றம் அதனால்.என் கணவரும் மகனும் உறவுகளும் நண்பர்களும் எனக்கு முதுகெலும்பு போல் இருந்து உதவிட நான் உறுதியானேன்.நீயா நானா போராட்டத்தில் தோற்கக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். inspiration ஆக கண்டிப்பாக இருக்கணும்னு இருந்தேன்

நிறைய நேரங்களில் தடுமாறினாலும் .

    இப்போ புற்றுநோய் உயிர்க்கொல்லி நோயில்லைனு மருத்துவம் நிரூபிச்சிட்டு இருக்கு.கொரோனா வந்ததிலேருந்து இது கொஞ்சம் இறங்கிடுச்சு.அதனால

Be happy and make others also happy.



    

Comments

  1. Stay blessed Allah is enough for us

    ReplyDelete
  2. நல்லது... கவனமுடன் இருப்போம்...

    ReplyDelete
  3. கடவுளுக்கு நன்றி... இன்னும் விழிப்புணர்வு தேவை.. எல்லோரிடமும் இன் நோயை பற்றிய புரிதலையும் அதன் தாக்கத்தையும் கொண்டு சேர்க்க இன்னும் நிறைய பதிவுகளை அவ்வப்போது பதிவிடுங்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கனவுகள்

இடமா படமா

இயற்கை